லோகத்திலேயே இந்த பாரத தேசத்தைத்தான் ஈஸ்வரன் கர்மபூமியாக வைத்திருக்கிறான்.
ஒரு வீடு என்றால் அதில் சமையலறை, பூஜையறை, படுக்கையறை என்று வெவ்வேறாக இல்லையா? ஒரு ஃபாக்டரி என்றால் அதில் யந்திரசாலை, நிர்வாஹஸ்தர் ஆஃபீஸ், கான்டீன் என்று தனித்தனியாக இல்லையா? இவற்றில் ஒன்றில் செய்வதை இன்னொன்றில் செய்வார்களா?அப்படி பகவான் லோகத்தில் வைதிக கர்மாநுஷ்டானத்துக்காக பாரத பூமியைத்தான் வைத்திருப்பதால் இங்கே மாத்திரம் இத்தனை சாஸ்திரங்களும் ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
மற்ற தேசங்களில் தீட்டு பார்கிறார்களா, விதிகளை அநுஸரிக்கிறார்களா? இன்னம் நம்முடைய மற்ற ஆசாரங்கள், ஸம்ஸ்காரங்கள் இதுகளைப் பின்பற்றுகிறார்களா?' என்று கேட்பதில் அர்த்தமில்லை......
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இப்படியிருக்கிற மற்ற எல்லா தேசங்களும் ஆத்ம ஸம்பந்தமான ஞானத்திலும், அப்படிப்பட்ட ஞானத்தை ஸம்பாதித்துக் கொண்டவர்களிலும் நம் தேசத்தைவிட ரொம்பவும் பின்தங்கியிருந்து வந்திருக்கின்றன என்று அவர்களே ஒப்புக்கொள்வதுதான். நித்ய சிரேயஸ் வேண்டும், ஈஸ்வரனை அடைய வேண்டும், ஆத்மஞானம் பெற வேண்டும் என்றால், அந்த தேசம்-இந்த தேசம், அந்தக் காலம்-இந்தக் காலம் என்று கால, தேசங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல் சாஸ்திரப்படி செய்தால்தான் ஸித்தி கிடைக்கும். - பெரியோர்கள் வாக்கு
இந்த பாரத தேசம் இந்த லோகத்திற்கு ஒரு பூஜையறை
PROUD TO BE AN INDIAN
No comments:
Post a Comment