Wednesday, 8 October 2014

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை - 1

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை பகவான் ரமண மஹர்ஷிகள் அருளிய

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை 

அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக்
கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!

அருணாசலம் என அகமே நினைப்பவர் 

அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று 

அபின்னமாய் இருப்போம் அருணாசலா

அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் 

அமர்வித்தது என்கொல் அருணாசலா

ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில் 

அகிலம் பழித்திடும் அருணாசலா

இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் 

இனியார் விடுவார் அருணாசலா

ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாசலா

உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் 

உறுதியாய் இருப்பாய் அருணாசலா

ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் 

இதுவோ ஆண்மை அருணாசலா

ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க 

இது உனக்கு அழகோ அருணாசலா

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது 

அகத்தில் நீ இலையோ அருணாசலா

ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் 

உன் சூதேயிது அருணாசலா

ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் 

உனையார் அறிவார் அருணாசலா

ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா

கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் 

காணுவது எவர் பார் அருணாசலா

காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் 

கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா

கிரி உரு ஆகிய கிருபைக் கடலே 

கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா

கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என் 

கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா

குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாசலா

கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள் 

கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா


ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.......

No comments:

Post a Comment