அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணாசலா
கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
கேடு செய்யாது அருள் அருணாசலா
கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
வெறி கொள அருள் அருணாசலா
கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா
கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாசலா
கௌதமர் போற்றும் கருணை மாமலையே
கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா!
சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இனமன
சலசம் அலர்த்தியிடு அருணாசலா
சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவாயான்
சாந்தமாய்ப் போவன் அருணாசலா
சித்தங் குளிரக்கதிர் அத்தம் வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாசலா
சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
சீரை அளித்து அருள் அருணாசலா
சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா
சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
சோதி உருக்காட்டு அருணாசலா
செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாசலா
சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்
நீராற்று அழிவேன் அருணாசலா
சைஎனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாசலா
சொல்லாது சொலி நீ சொல்லற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாசலா
சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என் கதி அருணாசலா
சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாசலா
ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாசலா
ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானந் தெரித்தருள் அருணாசலா
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.........
No comments:
Post a Comment