Friday, 10 October 2014

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை - 3




அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா



ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே
 நேர் நின்றனை என் அருணாசலா

தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய் 

தத்துவம் இது என் அருணாசலா

தானே தானே தத்துவம் இதனைத்

 தானே காட்டுவாய் அருணாசலா

திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்

தெரியும் என்றனை என் அருணாசலா

தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான் 

திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன் 

ஒப்பிட வாய் ஏன் அருணாசலா

தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம் 

தோயவே அருள் என் அருணாசலா

தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச் 

சேர ஒழித்தாய் அருணாசலா

தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத் 

தியக்கம் தீர்த்து அருள் அருணாசலா

தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான் 

தட்டழிந்தேன் அருள் அருணாசலா 

தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான் 

நட்டமாவேன் அருள் அருணாசலா

தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும் 

சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா!

நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள் 

நகையிட்டுப் பார் நீ அருணாசலா

நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ 

தாணுவா நின்றனை அருணாசலா

நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன் 

நின் அருள் மழை பொழி அருணாசலா

நீ நான் அறப்புலி நிதம் களிமயமா 

நின்றிடு நிலை அருள் அருணாசலா

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட 

எண் அலை இறுமென்று அருணாசலா

நூலறிவு அறியாப் பேதையன் என்தன் 

மால் அறிவு அறுத்து அருள் அருணாசலா

நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல் 

நக்கனா நின்றனை அருணாசலா

நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ 

மோசம் செயாது அருள் அருணாசலா! 

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா


No comments:

Post a Comment