Wednesday, 8 October 2014

சந்திர கிரகணம்

ந்திர கிரகணத்தைப் புண்ணிய கால மாகக் கொண்டாடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். முறையாகத் தனது கிரணத்தை (கதிர்களை) வாரி இறைக்கும் சந்திரனுக்கு, மறைவு ஏற்படுகிறது.‘மனதுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் உண்டு’ என்று வேதம் கூறும். ‘விராட புருஷனின் மனதிலிருந்து சந்திரன் தோன்றினான்’ என்ற தகவல் வேதத்தில் இருக்கிறது (சந்திரமா மனஸோ ஜாத:). ஜோதிட நூல்க ளும், மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றன. அதனால் சந்திரனை மனோகரகன் என்கின்றோம்.

கிரகணத்தை ‘அலப்ய யோகம்’ _ அதாவது நல்ல காரியங்களைச் செயல்படுத்த மிக அரிய சந்தர்ப்பம் என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடும். ‘எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. தீட்டுப் பட்டிருக்கிறது. என்னால் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட முடியாது!’ என்று எண்ண வேண் டாம். அவர்களும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று விதிவிலக்கு அளிக்கிறது தர்ம சாஸ்திரம். 
கிரகண காலம் போனால் வராது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தக் காலத்தில் முன்னோரது தர்ப்பணத்தைச் செயல்படுத்த அனுமதிக்கிறது தர்ம சாஸ்திரம். குளிக்கா விட்டா லும் காலைக் கடனை காலத்தில் செய்ய நிர்ப்பந்திப்பது போல் இதையும் விடாமல் காலத்தி லேயே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. சாதாரண வேளையில் செய்யும் கொடைகள் குறிப்பிட்ட பலனை மட்டும் அளிக்கும். ஆனால், கிரகண காலத்தில் செய்யும் கொடை ஆயி ரம் மடங்கு பலன் அளிக்கும். தான- தர்மங்களுக்கு உகந்த வேளையாக அந்த நேரத்தைப் பார்க்கிறது தர்ம சாஸ்திரம். சந்திரன் பூமியில் நுழைகிறான் (பூச்சாயாம் ஸ்வக்ரஹணே ப்ரவிசதீந்து:) என்று ஜோதிடம் கூறும். பூமி, சந்திரனை மறைத்து விடுகிறது என்று பொருள். ராகு, சந்திரனை மறைக்கிறான் அல்லது விழுங்குகிறான் என்று புராணம் கூறும். எது எப்படி இருந்தாலும் மறைவது கண்கூடு. மறைவு அவர்களுக்கும், நமக்கும் இடையூறு. அது விலக நமது செயல்பாடுகள் திருப்பி விடப்பட வேண்டும்.
உடல் தூய்மைக்குக் கிரகணம் துவங்கும் வேளையில் குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு ஆன்மிக விஷயங் களில் மனதை நுழைக்க வேண்டும். கிரகணம் முடிவுற்ற பிற கும் சிறப்பு நீராடல் தேவை. அப்போதுதான் நமது கடமை முழுமை பெறுகிறது. சிறுவர் முதல் முதியோர் வரை கிர கண காலத்தைக் கொண்டாடலாம். உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் நீராடுவது சிறப் பானது. குழந்தைகள், உடல்நலம் குன்றியவர்கள், கர்ப் பிணிகள் - ஆகியோருக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
மப்பும் மந்தாரமும் இருக்கும் சூழல், நமது வயிற்றில் இருக்கும் உணவு செரிப்பதைத் தாமதப்படுத்தும். அந்த வேளையில் தேவையான ஆதவனின் கிரணங்கள் பரவாத தால், வயிற்றில் இருக்கும் பித்த நீர் சுணக்கமுற்று, செயல்படுவது தடைப்படும் என்று ஆயுர்வேதம் கூறும். நீருண்ட மேகங்கள் அண்டை வெளியில் அப்பியிருக்கும் வேளையில், பேதிக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆயுர்வேதம். ‘கிரகணத்தின் தாக்கம், இயல்பான உடல் செயல்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும்’ என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. எனவே, அந்த வேளையில் உண வைத் தவிர்க்கும்படி வற்புறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.

கிரகண வேளையில் நாம் ஈடுபடும் ஆன்மிக அலுவல்களுக்கு குந்தகம் விளையாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கிரகணம் ஆரம்பமாவதற்கு சில மணிகள் முன்பே உணவை முடித்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். உணவு நிரம்பியிருந்தால் சிறுநீர் கழித்தல், சோம்பல், தூக்கம், சுணக்கம் போன்றவை நம்மை அலைக்கழிக்கும். அவற் றைத் தவிர்க்க உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று எண்ணுகிறது தர்ம சாஸ்திரம்.
தற்கால மருத்துவர்கள், நம் உடல் நலத்தைப் பேணிக் காக்க தியானம் செய்யவும், யோகக் கலையில் ஈடுபடவும், சூரிய நமஸ்காரம் செய்ய வும், உணவுக் கட்டுப்பாடு வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். அதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். நடைபயணமாக ஆலயம் செல்ல வேண்டும், ஆலயத்தை வலம் வர வேண்டும் என்ற ஆன்மிக அறிவுரையை அலட்சியம் செய்தவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி தற்போது இரண்டு கி.மீ. தூரம் காலையிலும், மாலையிலும் நடை பயில்கிறார்கள்.
நம் முன்னோர் தேவையில்லாத ஒன்றை அறிமுகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். ஆதவ னிடமிருந்து சூடான கதிர்களைப் பெற்று, அதைக் குளிரச் செய்து நம்மைக் குளிர வைக்கிறான் சந்திரன். சூரிய கிரணங்களின் வெப்பத்தால் நீர் நிலைகளை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்த வகையில் தனது கதிர்க ளால் மாசற்றதாக மாற்றி அமைப்பவன் சந்திரன். செடி- கொடிகளில் தனது கிரணங்க ளால் மருத்துவ குணத்தைத் தோற்றி வைப்பவன் என்ற தகவலை தலை அசைத்து விஞ்ஞானமும் வரவேற்கும். உலகத்தின் தலைவன் சந்திரன். அவனுக்கு ஒன்று என்றால் நாம் செயல்பட வேண்டாமா?
இன்று கிரகணம் பகல் 2.48 மணி முதல் 6.09 மணி வரை உள்ளது ... இது இந்த 2014 ஆண்டின் கடைசி கிரகணம் ஆகும் .
ஆகையால், சந்திர கிரகணத்தன்று அவனது உயர்வுக்காகவும் நமது நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்!
 

No comments:

Post a Comment