Friday, 17 October 2014

சிவார்ச்சனா சந்திரிகை - 4

சிவபூஜையின் விரி


ஆசமனம்

ஹீம் சிரசே நம: என்று சொல்லிக்கொண்டு முழங்கால்வரை கால்களையும் மணிக்கட்டுவரை கைகளையுஞ் சுத்தஞ் செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாகக் குக்குடாசனத்திலிருந்து கொண்டு இருகைகளையும் முழங்கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு இருகைகளிலுள்ள கட்டைவிரல் முதலிய விரல்களில் ஹாம்ஹிருதய யாயநம: ஹீம் சிரசேநம: ஹ¨ம் சிகாயைநம: ஹைம் கவசாயநம: ஹெளம் நேத்திரத்திரயாய நம: ஹ: அஸ்திராயபட் என்று நியாசஞ்செய்து கொண்டு, வலதுகையைப் பசுவின் காதுபோல் செய்து அதனால் உழுந்து அமிழ்ந்துமளவான நீரையெடுத்து அந்த நீரைப்பார்த்துக் கட்டைவிரல் சுண்டுவிரல்களை நீக்கிச் சுக்கிலபக்ஷமாயின் சந்திரரூபமாயும், கிருஷ்ணபக்ஷமாயின் சூரிய ரூபமாயும் அந்த நீரைப் பாவனை செய்து உட்கொண்டு, அதனால் நாக்கின் நுனியிலிருக்கும் சரஸ்வதி திருப்தி யடைந்தவளாகவும், தன்னுடைய சூக்கும தேகம் சுத்தியடையந்ததாகவும் பாவனை செய்து, ஒவ்வொரு ஆசமனத்துக்கும் இடையே கையைச் சுத்தி செய்து சுவதா என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தை உச்சரித்து பிரமதீர்த்தத்தால் மூன்று முறை ஆசமனஞ் செய்யவேண்டும். அதனால் தன்னுடைய முகம் சுத்தியடைந்ததாகவும், உதட்டிலிருக்கின்ற பிரணவதேவதை சுத்தியடைந்ததாகவும் பாவனை செய்துகொண்டு பின்னர்க் கட்டைவிரலின் அடியால் உதடுகளை இருமுறை துடைத்தல் வேண்டும்.

விபூதியின் வகை

கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.
வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.
வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.
மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும்.
இவற்றுள் அகற்பமான விபூதியாயின் அதனை எடுத்து அஸ்திர மந்திரத்தால் திக்குபந்தனஞ் செய்து ஹோம் ஈசான மூர்த்தாய நம:, ஹேம் தத்புருஷவக்திராய நம:, ஹ§ம் அகோரஹிருதயாய நம:, ஹிம் வாமதேவகுஹ்யாய நம:, ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம:, ஹாம் ஹிருதயாய நம:, ஹீம் சிரஸே நம:, ஹ¨ம் சிகாயை நம:, ஹைம் கவசாய நம:, ஹெளம் நேத்திராய நம:, ஹ: அஸ்திராய நம:, ஹ்லாம் நிவிருத்திகலாயை நம:, ஹ்வீம் பிரதிஷ்டா கலாயை நம:, ஹ்ரூம் வித்தியாகலாயை நம:, ஹ்யைம் சாந்திகலாயை நம:, ஹெளம் சாந்தியதீத கலாயயை நம: என்று பஞ்சப்பிரம்மஷடங்க மந்திரங்களாலும், கலாமந்திரங்களாலும் சுத்தி செய்யவேண்டும்.
விபூதிதரிக்கும் முறை உத்தூளனம் திரிபுண்டாமென இரண்டு வகைப்படும்.
உத்தூளனமும், அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்னான ரூபம் விதிஸ்னான ரூபமென இரண்டு வகைப்படும். நீரால் ஸ்னானஞ் செய்தவர்களுக்கு இந்த இருவித விபூதிஸ்னானங்களிலும் அதிகாரமுண்டு.

ஸ்னானமுறை

நீரில் மூழ்கி ஸ்னானஞ்செய்யமுடியாத சமயங்களில் கழுத்து வரையாயவது, இடுப்பு வரையாவது, முழங்கால் வரையாவது நீரால் சுத்தஞ் செய்து, ஈச வஸ்திரத்தால் சுத்தம் செய்யப்படாத அங்கங்களைத் துடைத்து, வேறு வஸ்திரந்தரித்து ஆசமனஞ் செய்து பின்னர் ஹ§ம்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வலது கால் கட்டை விரலிலிருந்து உண்டான அக்கினியால் தேகத்திலுள்ள வெளி அழுக்கு மாத்திரம் நீங்கினதாகப் பாவித்து அக்கினியின் சம்பந்தத்தால் கலங்கின விந்துத் தானத்திலுள்ள சத்தி மண்டலத்தினின்றும் பெருகுகின்ற மிகுந்த அமிர்ததாசையால் சரீரம் நனைந்ததாகப் பாவிக்கவேண்டும். பின்னர் மனத்தால் மூலமந்திரத்தை நாதாந்தமாக உச்சரித்து அதன் சம்பந்தத்தால் கலங்கின சத்திமண்டலத்திலுள்ள அமிருததாசையால் தன்னுடைய சரீரம் அபிஷேகஞ் செய்யப்பட்டதாகப் பாவிக்க வேண்டும். இந்த மானதஸ்னானத்தை எப்பொழுதெல்லாம் தன்னை அசுத்தனாக நினைக்கின்றானோ அப்பொழுதுதெல்லாம் செய்ய வேண்டும்.
அல்லது விந்துத் தானத்திலிருக்கும் அந்தச் சத்தியைப் பச ரூபமாகத் தியானஞ் செய்து அதனுடைய வாலினின்றுண்டான ஒளி ரூபமான அமிர்தப் பிரவாகத்தால் சரீரம் நனைந்ததாகப் பாவிக்கவேண்டும். இது பாவனாஸ்னானம்.
அல்லது கங்கை, யமுனை முதலிய திவ்விய தீர்த்தங்களாலாவது சரீரத்தை புரோக்ஷித்துக் கொள்ளல் வேண்டும்.
அல்லது அந்த «க்ஷத்திரங்களிலுள்ள மண்ணினாலாவது மண்ணின் தூளியினாலாவது, பஞ்சப்பிரம்மம்ஷடங்கம் மூலம் ஆகியமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு சரீரத்தைப் பூசிக்கொள்ளல் வேண்டும்.
இவற்றுள் யாதானுமொன்றைச் செய்து பஞ்சப் பிரம்ம மந்திரம் ஷடங்கமந்திரம் மூலமந்திரமென்னும் இவற்றை ஒருமுறை அல்ல மூன்று முறை ஜெபிக்கவேண்டும். பின்னர் முன்போல் இரண்டுமுறை ஆசமனஞ் செய்து வெளிக்கரணம் உட்கரணங்களால் நேரிட்ட அசுத்தத்தைப் போக்கும் விபூதிஸ்னானத்தை செய்ய வேண்டும்.

விபூதிஸ்நான முறை

பசு, பிராமணர், தேவதை, அக்கினி, குரு, வித்தியாபீட மென்னும் இவற்றின் சன்னிதியை நீக்கி, மிலேச்சர், சண்டாளன் செய்நன்றி மறந்தவன் ஆகிய இவர்களுடைய பார்வையில் இராமல், நடைபாதையாகவில்லாத சுத்தமான இடத்தில் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் முறையே ஒரு பலம், ஒன்றரைப் பலம், இரண்டு பலம், இரண்டரைப் பலம் அளவுள்ளதாகவாவது ஒரு பிடியினளவாகவாவது கற்ப அநுகற்பரூபமான விபூதியை எடுத்து நிருதிதிக்கில் இராக்ஷத பாகத்தை எறிந்துவிட்டு அகற்பமான விபூதியாயின் முதலாவது திக்கு பந்தனஞ் செய்து பஞ்சப்பிரம்ம ஷடங்க மந்திரங்களால் சுத்தி செய்க. நான்கு விதமான விபூதியையும் ஹ§ம்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் ஏழு முறை அபிமந்திரணஞ்செய்க. இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட விபூதியால் விரக்தனாயிருந்தால் பாதமுதல் சிரசு வரையும், விரக்தனாக இல்லையாயின் சிரசு முதல் பாதம் வரையும் வலது கைக்கட்டை விரல் விரல் சுட்டு விரல்களின் நுனியால் எடுக்கப்பட்ட சிறிது விபூதியால் கைகால்கள் தவிர கைக்கு எட்டக் கூடிய ஏனைய அங்களில் பரிசித்து உத்தூளனஞ் செய்க. இது விபூதிஸ்நானத்தில் அழுக்கு நீக்கத்திற்குரிய ஸ்னானமெனப்படும். பின்னர் ஷடங்க மந்திரங்களால் செபிக்கப்பெற்ற விபூதியால் ஈசான முதலிய பஞ்சப்பிரம்ம மந்திரங்களை உச்சரித்து சிரசு, முகம், இருதயம், குய்யம், பாதம் ஆகிய இந்த அங்கங்களிலும், சத்தியோஜாதமந்திரத்தால் தோள்களிலும் ஏனைய அங்கங்களிலும், வலது கையாலும், வலது கைக்கு எட்டாத அங்கங்களில் இடது கையாலும் உத்தூளனஞ் செய்க. எஞ்சியுள்ள விபூதியை கும்ப முத்திரை செய்து மூலமந்திரத்தால் சிரவில் அபிஷேகம் செய்க.
இவ்வாறு பிராமணர் எல்லா அங்களிலும் உத்தூளனஞ் செய்ய வேண்டும். க்ஷத்தியர் முதலியோர் லலாடத்தில் முறையே நான்கு நுனியையுடைய சதுரச்சிரமாகவும், மூன்று நுனியையுடைய திரிகோணமாகவும், வட்டமாகவும் உத்தூளனஞ் செய்துகொண்டு கழுத்துக்குக் கீழும் நாபிக்கு மேலும் உத்தூளனஞ் செய்யவேண்டும்.
சூத்திரர் உத்தூளனமின்றி பின்னர்க் கூறப்படும் திரிபுண்டாரூபமான விபூதிஸ்நானத்தைச் செய்யவேண்டும். இந்தவிதி தபசியல்லாத சூத்திர சாரியாருக்குரியது. இதுபற்றியே ஞானரத்தினாவளியில் தபசியாயின் முறைப்படி விபூதியை எடுத்து அதனால் விபூதிஸ்நானஞ் செய்ய வேண்டுமென்பதை ஆதியாகவுடைய வாக்கியங்களால் அழுக்கு நீக்கத்திற்குரிய ஸ்னானம் விதிஸ்னானம் ஆகிய இரண்டின் ரூபமான உத்தூளனங்களில் அதிகாரி விசேடத்தைக் குறிப்பிட்டு தபசிகளுக்கு உத்தூளன ஸ்நானம் சொல்லப்பட்டிருத்தலால் உத்தூளனமல்லாத திரிபுண்டா ஸ்னானமானது தபசியல்லாத சூத்திரருக்குரியதாகும்.
இவ்வாறே க்ஷத்திரியரும் வைசியரும் தபசிகளாயில்லையாயின் திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்னானத்தையே செய்யவேண்டும்.
பிராமணர் முதலிய நான்கு வருணத்தவரும் உத்தூளனஸ்நானஞ் செய்ய முடியாத சமயங்களில் திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்நானத்தையே செய்யவேண்டும்.
திரிபுண்டர ரூபமான விபூதி ஸ்நானத்தை மட்டும் கருதியே சில ஆகமங்களில் பிராமணர் முதலிய நான்கு வருணத்தவர்களுக்கும் முறையே ஒரு பலம் அரைப்பலம், கல்ப் பலம் அரைக்கால்ப் பலமென்று விபூதியின் அளவு கூறப்பட்டிருக்கின்றது.
இந்த விபூதிஸ்நானத்தை தீ¬க்ஷயையுடைய கிரகஸ்தன் மூன்று சந்திகளிலும் நீரோடு கலந்து செய்யவேண்டும். பெண்களும், சன்னியாசிகளும் நீரின்றியும், விரதத்தையுடையவரும், வானப்பிரஸ்தரும், கன்னிகையும், தீ¬க்ஷயில்லாதவரும், மத்தியானத்திற்கு முன் நீரோடு கலந்தும் மத்தியானத்திற்குப் பின் நீரோடு கலப்பின்றியும் விபூதியைத் தரிக்க வேண்டும்.
இவ்வாறு விபூதிஸ்நானம் செய்து வேறு ஆடை தரித்துக் கொண்டாவது தரிக்காமலாவது ஆசமனஞ் செய்யவேண்டும்.

திரிபுண்டர முறை

திரிபுண்டரத்தை நான்கு வருணத்தவரும் முறையே ஏழு, ஐந்து, நான்கு, மூன்றங்குலப் பிரமாணமாகத் தரிக்கவேண்டுமென்றும், அல்லது அனைவரும் லலாடம், இருதயம், கை ஆகிய இவைகளில்நான்கு அங்குல அளவாகவும், ஏனைய அவயவங்களில் ஓரங்குல அளவாகவும், தரிக்கவேண்டுமென்றும் பல ஆகமங்களில் கூறப்பட்டிருத்தலால், அவற்றுள் முன்னோரனுட்டித்து வந்த ஒரு முறையைக் கொண்டு லலாட முதலிய தானங்களில் சுட்டுவிரல், நடுவிரல், அணிவிரல், என்னுமிவைகளால் திரிபுண்டரதாரணஞ் செய்ய வேண்டும்.
லலாடத்தில் நடு விரல் அணிவிரல் கட்டைவிரலென்னும் இவைகளாலாவது திரிபுண்டரஞ் செய்யவேண்டும்.
திரிபுண்டரமானது நெருக்கமான மூன்று ரேகையுடன் கூடினதாயும், வேறு வேறாயும் எவ்வாறு சித்திக்குமோ அவ்வாறு திரிபுண்டரத்தைத் தரிக்கவேண்டும்.
திரிபுண்டரதாரணமும், விபூதி ஸ்நானமும், செய்யுங்காலத்து மூன்று முகமும், மூன்று கையும், மூன்று காலும், மூன்று நேத்திரமும் விபூதிப்பூச்சும் சிவந்த புஷபங்களால் அலங்காரமும் உடையவராயும், தாண்டவம் செய்பவராயும் அச்சஞ் செய்பவராயுமுள்ள விபூதி தேவரைத் தியானஞ் செய்து கொள்ளல்வேண்டும்.
திரிபுண்டர ஸ்தானத்தில் அவரவர் குல முறைப்படி அனுட்டித்து வந்த நான்கு கோணமுள்ளவாகவாவது பாதிச் சந்திர ரூபமாகவாவது மேல் நோக்கிய தீபரூபமாகவாவது வேறுவிதமான திரிபுண்டரத்தையாவது தரிக்க வேண்டும்.
எல்லாப் புண்டரமும் தனி விபூதியினாலாவது, சந்தனஞ் சேர்ந்த விபூதியினாலவது, நீரால் நனைத்துத் தரிக்கப்படல் வேண்டும்.
லலாடத்தில் எவ்வாறு புண்டரம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வாறே லலாடம் இருதயம் தோள்கள் நாபி என்னும் இந்த ஐந்து தானங்களிலும் தரிப்பதென்னும் பக்ஷத்தில் முறையே சிவன், மகேசுவரன், உருத்திரன், விட்டுணு, பிரமன் ஆகிய இந்த ஐந்து தேவதைகளையுடையதாயும், லலாடம், கழுத்து, தோளிரண்டு, புயமிரண்டு, முழங்கை இரண்டு, மணிக்கட்டு இரண்டு, மார்பு, வயிறு நாபி, பக்கமிரண்டு பிருஷ்டம் என்னும் இந்தப் பதினாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் சிவன், மகேசுவரன் முதலிய ஐவர்களையும், வாமை முதலிய ஒன்பது சக்திகளையும், அசுவினி தேவரிருவரையும் உடையதாகவும், சிரசு, லலாடம், கண்ணிரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, முகம், கழுத்து, தோளிரண்ட, முழங்கை இரண்டு, மணிக்கட்டு இரண்டு, இருதயம் பக்க இரண்டு, நாபி குய்யம் இரண்டு, இடுப்பின் மேல்பாகம் இரண்டு, துடை இரண்டு, முழங்கால் இரண்டு, கரண்டைக்காலிரண்டு, பாதம் இரண்டு ஆகிய இந்த முப்பத்திரண்டு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் அட்ட மூர்த்திகளையும், அட்ட வித்தியேசுவரர்ளையும் அட்டதிக்குப் பாலகர்களையும், அட்ட வசுக்களையும் உடையதாகவும், மேற்கூறிய முப்பத்திரண்டுடன் இருகைகளின் விரல்கள் இரண்டாகவும், இருகால்களின் விரல்கள் இரண்டாகவும் நான்கு சேர்த்து முப்பத்தாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில், சிவம், சக்தி, மகேசுவரம், சதாசிவம், சுத்தவித்தைமாயை, கலை, வித்தை, அராகம், காலம், நியதி புருடன், பிரகிருதி, அகங்காரம், புத்தி, மனம், புரோததிரம், துவக்கு, சச்சு, சிங்குவை, மூக்கு, வாக்கு, பாதம், கை, பாயு, உபத்தம், சத்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், ஆகாயம் வாயு, அக்கினி, அப்பு, பிருதிவி என்னும் இந்த முப்பத்தாறு தத்துவங்களின் அதிதேவதைகளையுடையதாகவும், இடம் காலமென்னுமிவற்றிற்குத் தக்கவாறு செய்யவேண்டும்.
முப்பத்தாறு தானங்களில் தரிப்பதென்னும் பக்ஷத்தில் சிவம் முதல் ஆகாசமீறான தத்துவங்களை வட்டமான சொரூபமுடையனவாயும், படிகம், சூரியகாந்தம், சந்திரகாந்தம், பசுவின்பால், பவளம், இராஜபனை, மை, இந்திராயுதம், இந்திரகோபமென்னும்பட்டுப்பூச்சி, மேகம், பத்மராகம், பவளம், இந்திரநீலம், குங்குமம், ஜபாகுசுமம் இந்திராயுதம், சூரியன், சுவர்ணம், அருகு, மஞ்சள், அறளி, காளமேகம், நீலரத்தினம், நல்முத்து, இரத்தினம், சுவர்ணம், படிகம், என்னுமிந்த வர்ணங்களையுடையனவாகவும், வாயுவை கருமையும், நான்கு கோணமுமுடையதாகவும், அக்கினியை வட்டமும் மூன்று கோணமுமுடையதாகவும் ஜலத்தை வெண்மையும் பாதிச் சந்திராகாரமுடையதாகவும், பிருதிவியை பொன்மையும் நான்கு கோணமுடையதாகவும் பாவனை செய்து ஹாம் சிவதத்துவரூபாயசிவாய நம: என்பது முதலாக ஒவ்வொரு தத்துவ மந்திரங்களால் அந்தந்தத் தானங்களில் புண்டரங்களைத் தரித்துக் கொள்ளல்வேண்டும். இவ்வாறு வேறு பக்ஷங்களிலும் ஊகித்துக்கொள்க.
அவரவர்களின் முன்னோர்களனுட்டித்து வந்தமுறையாகத் தொன்றுதொட்டு நிகழப்பெற்றதாயும் பல திவ்வியாகமங்கள், ஸ்மிருதி, புராணம் என்னுமிவைகளில் கூறப்பட்டதாயுமுள்ள தானம், எண்ணிக்கை, விபூதி, சந்தன முதலிய திரவியவேறுபாடு, தேவதை வேறுபாடு என்னுமிவைகளுடன் கூடினவைகளாகப் புரண்டரங்களைத் தரித்தல் வேண்டும். விபூதிதாரண முறை முடிந்தது.

உருத்திராக்கதாரண விதி

உருத்திராக்கதாரணமும் விபூதிதாரணம் போலச் சிவ பூசையில் எப்பொழுதுந் தரிக்கவேண்டும். பிராமணர் முதலிய ஜாதியார் முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என்னும் வர்ணங்களையுடைய உருத்திராக்கங்களைத் தரிக்கவேண்டும். சொல்லப்பெற்ற வர்ணங்களையுடைய உருத்திராக்கங்கள் கிடையாவிடில் பிராமணர் நான்கு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். க்ஷத்திரியர் செம்மை முதலிய மூன்று வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். வைசியர் பொன்மை முதலிய இரண்டு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந்தரிக்கலாம். சூத்திரர் கருமை வர்ணமுடைய உருத்திராக்கத்தையே தரிக்கவேண்டும். அல்லது அனைவரும் எல்லாவகையான உருத்திராக்கங்களையுந் தரிக்கலாம்.
சிரசு, கழுத்து, காது, புயம், மணிக்கட்டு, மார்பு என்னுமிந்தத் தானங்களில் அங்கங்களினளவுக்கு உரியதான எண்ணிக்கையுடன் கூடிய உரத்திராக்கத்தைத் தரிக்க வேண்டும்.
அல்லது சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, காதுகளில் தனித்தனி ஆறு, கைகளில் தனித்தனி பதினாறு, மணிக்கட்டுகளில் தனித்தனி பன்னிரண்டு, மார்பில் நூற்றெட்டு இவ்வாறு இருநூற்று நாற்பத்தெட்டு உருத்திராக்கங்களைத் தரிக்கலாம். சிகையில் ஒன்று சேர்த்துத் தரிக்கலாம்.
சிகையில் ஒன்று, சிரசில் முப்பத்தாறு, மார்பில் ஐம்பது, பூணூலில் நுற்றெட்டு, கழுத்து, காது, புயம், மணிக்கட்டு என்னுமிவைகளில் முன்போல் முறையே முப்பத்திரண்டு, பண்ணிரண்டு, முப்பத்திரண்ட, இருபத்து நான்கு ஆக நூறு. இவ்வாறு இருநூற்றுத்தொண்ணூற்றைந்து உருத்திராக்கங்கள் தரிக்கலாம்.
சிரசில் நூற்றெட்டு, நாபிவரை நூற்றெட்டெண்ணுடைய மூன்று மாலைகள், கழுத்து, காது, மார்பு, புயம், மணிக்கட்டு என்னுமிவைகளில் முன்போல் நூற்றைம்பது, இவ்வாறு ஐந்நூற்று எண்பத்திரண்டு உருத்திராக்கங்கள் தரிக்கலாம்.
அல்லது கிடைத்ததற்குத் தக்கவாறு தரிக்கலாம். வைரம், மாணிக்கம், வைடூரியம், பவளம், நல்முத்து என்னும் பஞ்சரத்தினங்களுடன் கூடிய உருத்திராக்க தாரணமானது சுரம், பைசாசம், மேகம், குட்டம், பகந்தரம், குழந்தையை அபகரித்ததாலுண்டான தோஷமாகிய அபஸ்மாரமென்னுமிவைகளை நிவிருத்தி செய்யும்.
மகுடம், குண்டலம், காதணி, கேயூரம், கடகம், ஒட்டியாணம் என்னுமிவைகளில் உருத்திராக்கத்தைத் தரித்தால் அபமிருத்துவை நாசஞ்செய்யும். மற்ற இடங்களில் தரித்தால் ஆயுள் சம்பத்து கீர்த்தி என்னுமிவைகளை விருத்திசெய்யும். சிகையில் தரித்தால் கோடி மடங்கு பலன் உண்டு. காதுகள், கழுத்து, புயம் என்னுமிவைகளில் தரித்தால் முறையே ஒன்றற்கொண்டு பன்மடங்கதிகமான பலத்தைச் செய்யும். கைகளில் தரித்தால் அளவற்ற பலத்தைச் செய்யும்.
ஒரு முகமுடைய உருத்திராக்கத்தைச் சிகையில் மறைத்துத்தரித்தால் பிராமணக்கொலை செய்ததோஷமும், ஆயுதம், அக்கினி, திருடர், மழை என்னுமிவைகளாலுண்டான பெரிதான அச்சங்களும் நீங்கும்; ஆயுள்கீர்த்தி, சம்பத்து என்னுமிவைகளை விருத்திபண்ணும். போக மோக்ஷங்களைக்கொடுக்கும்; எல்லாச் சித்திகளும் உண்டாகும்.
இரண்டு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் பசுக்கொலையாலுண்டான தோஷத்தை நீக்கும்.
மூன்று முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் பெண்ணைக்கொன்றதனாலுண்டான தோஷத்தை நீக்கும்.
நான்கு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் புணருவதற்கு உரிமையில்லாத பெண்களைப் புணர்ந்த தோஷமும், தின்னுதற்கு உரிமையில்லாத பண்டங்களைத் தின்னுதலா லுண்டான தோஷமும் முதலிய தோஷங்களை நீக்கும்.
ஐந்து முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் எல்லாப் பாவங்களையும் நீக்கும்.
ஆறு முகமுடைய உருத்திராக்கத்தை வலது கையில் தரித்தால் கர்ப்பத்தைக் கெடுத்ததோஷத்தை நீக்கும்.
ஏழு முகமுடைய உருத்ரி£க்கத்தைத் தரித்தால் சுவர்ணத்தைத் திருடியதாலுண்டாம் தோஷத்தையும், பசுவைக் கொன்றதனாலுண்டாம் தோஷத்தையும் நீக்கும், விடத்தையும் போக்கும்.
எட்டு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் குருபத்தினியைப் புணர்ந்ததனாலுண்டான தோஷத்தையும், வஞ்சகமாக தொழில் செய்ததனாலுண்டான தோஷத்¬யும் நீக்கும்.
ஒன்பது முகமுடைய உருத்திராக்கத்தை இடது கையில் தரித்தால் ஒரு லக்ஷங்கோடி மகாபாதகங்களை நீக்கும்.
பத்து முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால், பீடை, பிசாசம், வேதாளம், பிரமராக்ஷஸம், சர்ப்பம், சிங்கம், புலி என்னுமிவைகளாலுண்டான அச்சத்தை நீக்கும்.
பதினொரு முகமுடைய உருத்திராக்கத்தைச் சிகையில் தரித்தால் ஆயிரம் அசுவமேதயாகம், நூறுவாஜபேயம், இலக்ஷங்கோடி தானம் என்னுமிவைகளாலுண்டாம் பலத்தைக் கொடுக்கும்.
பன்னிரு முகமுடைய உருத்திராக்கத்தைக் கழுத்தில் தரித்தால் மிகுந்த தக்ஷிணையுடன் செய்த கோமேதம் அசுவமேத மென்னும் இவைகளாலுண்டாம் பலனைக் கொடுக்கும்; ஐசுவரியத்தை விருத்தி செய்யும்; இகத்தில் பற்களையுடை மிருகங்கள், கொம்புள்ள மிருகங்கள், திருடர், அக்கினி என்னுமிவைகளாலுண்டாகும் அச்சத்தைப் போக்கும்; எல்லாப் பாவங்களையும் நாசஞ் செய்யும்.
பதின்மூன்று முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் சமானமில்லாத போகத்தைக் கொடுக்கும்; இரசவாதம், தாதுவாதம், குளிகை முதலிய சித்திகளை உண்டு பண்ணும்; தந்தை, தாய், சகோதரர், பெண்கள் ஆகிய இவர்களைக்கொன்ற தோஷம் நீங்கும்.
பதினான்கு முகமுடைய உருத்திராக்கத்தைத் தரித்தால் எல்லாக்காரிய சித்திகளையும் உண்டுபண்ணும்; எல்லா வியாதிகளையும் பாவங்களையும் போக்கும்; ஞானயோகசித்திகளை உண்டு பண்ணும்.
மரணஜனன சூதகங்கள், பெண்ணின் சேர்க்கை, மலஜலங்கழித்தல், புலால், பூண்டு, தேத்தாங்கொட்டை, முருங்கைக்கீரை, நறுவிலி என்னுமிவைகளை உண்ணுதலென்னுமிவற்றில் சிரசு, புயம், கழுத்து, காது என்னுமிவைகளைத் தவிர ஏனைய அங்கங்களில் உருத்திராக்கங்கள் தா¤க்கலாகாது.
உருத்திராக்கத்தைக் கற்பசூத்திரத்தில் கூறியவாறு தானஞ் செய்யின் எல்லா வேதங்களையும், புராணங்களையும், அத்தியயனஞ் செய்ததனாலுண்டாம் பலனையும், எல்லா யாகங்களையும் தானங்களையும் செய்ததனாலுண்டாம் பலனையும், எல்லாத் தீர்த்தங்களினுஞ் சென்று ஆடினதாலுண்டாம் பலனையும் கொடுக்கும்; எல்லா ரோகங்களையும் போக்கும்; நூறு இலிங்கங்களைத் தாபித்ததாலுண்டாம் பலனையும், நூறு இலிங்கங்களைத் தானஞ்செய்ததாலுண்டாம் பலனையும், ஆயிரம் சாளக்கிராமத்தைத் தானஞ்செய்ததாலுண்டாம் பலனையும், ஆயிரம் கன்னியாதானத்தின் பலனையும் கொடுக்கும்; புத்திரமித்திரருடன் கூடின சகல ஐசுவரிய போகங்களையும் கொடுக்கும்; சிவசாயுச்சியத்தையுங்கொடுக்கும்.
இதுபோல் இந்தத்தானங்களை எந்தச் சிவபக்தன் ஏற்றுக்கொள்ளுகின்றானோ, அந்தச் சிவபக்தனுக்கும் இவ்வளவு பலன்களும் உண்டு.
பௌர்ணமி, இமாவாசை, சங்கிராந்தி, (உபராகம்) கிரகணம், ஜன்ம நக்ஷத்திரம் முதலிய புண்ணிய தினங்களில் உருத்திராக்க தாரணஞ்செய்யின் எல்லாப் பாவங்களையும் விலக்கும்.
பூஜாகாலத்தில் உருத்திராக்கத்தைச் சிரசில் ஈசான மந்திரத்தாலும், காதுகளில் தத்புருட மந்திரத்தாலும், கழுத்து முதலிய தானங்களில் அகோர மந்திரத்தாலும், மார்பில் வியோமவியாபி மந்திரத்தாலும் தரிக்கவேண்டும். உருத்திராக்கதாரண முறை முடிந்தது.

சகளீகரண முறை

பின்னர் காநியாச அங்கநியாசரூபமான சகளீகரணம் மூன்று வகைப்படும். அவை வருமாறு : - சிருட்டிநியாசரூபம், திதி நியாசரூபம், சங்கார நியாசரூபமென மூவகைப்பட்டு முறையே கிரகஸ்தர்களுக்கும், பிரமசாரிகளுக்கும், வானபிரஸ்த சன்னியாசிகளுக்கும் உரியனவாகும். இவற்றுள், சிருட்டி நியாச ரூபமான முறையைக் கூறுதும்.

கரநியாசம்

இடதுகையையும் இடதுகையின் பின்பக்கத்தையும் மணிக்கட்டு முதற்கொண்டு வலதுகையினால் ஹ: அஸ்திராயபட் என்ற மந்திரத்தை உச்சரித்துத் துடைத்து, இருகைகளிலும் சந்தனமிட்டு அஸ்திர மந்திரத்தால் இருமுறை துடைத்து அதே மந்திரத்தால் வலதுகையையும் அதன் பின் பக்கத்தையும் இடதுகையால் ஒருமுறை துடைத்து இருகைகளையும் மணிக்கட்டுவரை அஸ்திர மந்திரத்தின் தேஜஸால் வியாபிக்கப்பட்டனவாகப் பாவித்து இருகைகளையும் சம்புடம்போல் மூடி, இரண்ட கட்டைவிரல்களில் மத்தியில் அமிர்தமயமான சத்திமண்டலத்தைத் தியானித்து ஹாம் சக்தயேவெளஷட் என்னும் மந்திரத்தை உச்சரித்து அந்த அமிர்தத்தால் இருகைகளையும் நனைத்து, சேர்க்கப்பட்ட இரு கட்டைவிரல்களின் அடிகளையுடையசம்புடம் போன்ற இருகைகளிலும் ஓம்ஹாம் சிவாசனாய நம: என்று நியாசஞ் செய்து, கையின் மத்தியில் ஓம்ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்ற மந்திரத்தை உச்சரித்து, பிரகாசரூபமாயும், அலையாத மின்னலுக்குச் சமானமாயும், வெண்மை நிறமுடையதாயுமிருக்கும் பரமசிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து ஹோம் ஈசானமூர்த்தாய நம: எனற மந்திரத்தால் இரண்டு கட்டைவிரல்களிலும் சுட்டு விரல்களால் நியாசஞ்செய்து, சுட்டுவிரல் முதல் சுண்டுவிரல் வரையுள்ள விரல்களில் கட்டை விரல்களால் ஹேம் தத்புருஷவக் திராய நம: என்பது முதலிய நான்கு மந்திரங்களால் நியாசஞ் செய்து, ஹாம்ஹெளம் வித்தியாதேஹாய நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டைவிரைல் அணிவிரல்களால் இரண்டு கைகளிலும் முப்பத்தெட்டுக கலைகளின் சொரூபமாயும் சதாசிவ சொரூபமாயுமிருக்கும் தூலமான வித்தியாதேகத்தை நியாசஞ்செய்து, நேத்திரேபியோ நம: என்னும் மந்திரத்தால் கைகளில் நேத்திரத்தை நியாசஞ்செய்து ஹாம்ஹெளம் சிவாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து, கட்டைவிரல் அணிவிரல்களால் சதாசிவ தேகத்திற்கு வியாபகமான சிவனை ஆவாகனஞ் செய்யவேண்டும். பின்னர் சுண்டுவிரல் முதலிய விரல்களில் ஹாம்ஹிருதயாய நம: என்பது முதலிய ஐந்து மந்திரங்களை நேத்திர மந்திரத்தை நீக்கி முறையே நியாசஞ்செய்து, இடது வலது கைகளை ஒன்றை ஒன்றினால் கவசாய நம: என்று மூடி இரண்டு கைகளையுஞ் சேர்த்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்யவேண்டும்.
பரமீகரணமாவது நியாசஞ் செய்யப்பட்ட இருதயம், சிரசு, சிகை முதலியவைகளும், வேறு வேறு வர்ணமான கலைகளும், ஆவாகனஞ் செய்யப்பட்ட பரமசிவனுடைய மிகவெண்மையான தேஜசுடன் அந்தந்த வர்ணங்களோடு கலப்பதாகப் பாவித்தல்.

அங்கநியாசம்

வலது கைக்கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்சிவாசனாய நம: என்று உச்சரித்துக்கொண்டு, தேகத்தின் மத்தியிலாவது அல்லது இருதயத்திலாவது மூலாதாரத்திலிந்துண்டாண வெண்மையான சிவாசன பத்மத்தை நியாசஞ செய்து ஓம் ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கிழங்கிருக்கும் நாபி முதலாகாவாவது இருதயமுதலாகவாவது புருவ நடுவரை தேஜஸ் சொரூபமான சிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து, நான்கு விரல்களையும் மடக்கி முஷ்டி செய்து கட்டைவிரலால் ஈசானமூர்த்தாய நம: என்னும் மந்திரத்தை சிரசில் நியாசஞ்செய்து, கட்டை விரலுடன் கூடின சுட்டுவிரல் முதலிய விரல்களால் முகம், இருதயம், குய்யம், பாதம் என்னுமிவைகளில் தத்புருஷ முதலிய மந்திரங்களை முறையே நியாசஞ்செய்து புருவ நடுமுதல் பிரமரந்திரமீறாக ஹாம்ஹெளம் வித்தியா தேஹாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து வித்தியாதேகத்தை நியாசஞ்செய்து, நேத்திர மந்திரத்தை நேத்திரங்களில் மத்தியிலுள்ள மூன்று விரல்களால் நியாசஞ்செய்து அந்த வித்தியாதேகத்தில் கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்ஹெளம் சிவாய நம: என்று உச்சரித்துப் பரமசிவனை ஆவாகனஞ் செய்ய வேண்டும்.
பின்னர் இருதயம், சிரசு, சிகையென்னுமிவைகளில் கட்டை விரல்களுடன் கூடின சுண்டுவிரல், அணிவிரல், நடுவிரல்களால் இருதய சிரசு சிகாமந்திரங்களை நியாசஞ்செய்து, கழுத்துமுதல் மார்பு நடுவரை மறைத்தல் ரூபமாக கவசமந்திரத்தைச் சுட்டு விரல்களால் நியாசஞ்செய்து, கைகளில் அஸ்திரமந்திரத்தை அணிவிரல் கட்டை விரல்களால் மூன்று முறை நியாசஞ் செய்ய வேண்டும். எல்லா மந்திரங்களும் நம: என்னும் பதத்தை இறுதியிலுடையனவாக இருத்தல் வேண்டும். அஸ்திரமந்திரம் மாத்திரம் ஹ§ம்பட் என்னும் பதத்தை இறுதியிலுடையதாக இருத்தல் வேண்டும்.
பின்னர் ஹ§ம்பட் என்னும் பதத்தை இறுதியினுடைய அஸ்திர மந்திரத்தால் மூன்று முறை தாளஞ்செய்து திக்குபந்தனஞ்செய் கவசமந்திரத்தால் சுற்றி வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் மகாமுத்திரையைக் காண்பிக்கவேண்டும்.
மகாமுத்திரையாவது சிரசு முதல் பாதம் ஈறாக இருகைகளாலும் பரிசித்தல்.
பின்னர் தன்னைச் சிவனுக்குச் சமானமாகப் பாவித்துக்கொள்ளல் வேண்டும். இவ்வாறு அங்க நியாசஞ்செய்து, பட்டம், தலைப்பாகை, கவசம், கைகளில் அஸ்திரம் என்னுமிவைகளைத் தரித்து யுத்தவீரன்போல் துஷ்டர்களால் தீண்டத்தகாதவனாக ஆகின்றான். சகளீகரணம் முடிந்தது.

சாமான்னியார்க்கிய பூஜை

பின்னர் சாமான்னியார்க்கிய பாத்திரத்தை அஸ்திரமந்திரத்தால் சுத்திசெய்து விந்துஸ்தானத்திலிருந்து பெருகுகின்ற அமிர்தமாகப் பாவிக்கப்பட்ட சுத்தஜலத்தால் ஹாம் இருதயாய வெளஷடு என்னும் மந்திரத்தை உச்சரித்துப் பூர்த்திசெய்து ஹாம் இருதயாய நம: என்னும் மந்திரத்தால் ஏழுமுறை அபிமந்திணஞ் செய்து, கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து சந்தனமிட்டு புஷ்பத்தாலருச்சித்து தேனுமுத்திரை காட்டல் வேண்டும். இந்த சாமான்னியார்க்கிய ஜலமானது சிபெருமானல்லாத ஏனைய துவாரபாலர் முதலியோருக்கு உபயோகம்.

Thanks to Shaivam.org 

Monday, 13 October 2014

ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் கோவில் , ஒண்டிப்புதூர்

அன்பர்களே ,

 இன்று என் வாழ்வில் மற்றும் ஒரு நல்ல நாளாக அமைந்தது .

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் கோவில் மூலமாக ஆசிரம குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு  புத்தாடைகளும் , இனிப்பு பலகாரங்களும் இரவு அன்னதானமும் ஏற்பாடு செய்ய பட்டு வழங்கப்பட்டது .

கோவில் கமிட்டியர்கள் மற்றும் கமிட்டி செயலாளர் திரு.ராஜேந்திரன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டு அன்னதான உதவியும் , இனிப்பும் , புத்தாடைகளுக்கான பொருளுதவியும் வழங்கினர் . அவர்களில் சிலர் திரு.மூர்த்தி , திரு.மனோகரன் , திரு.கணபதி அண்ணன், திரு.மந்தராசல மூர்த்தி, திரு.செல்ல பாண்டி , திரு.சவுந்தர பாண்டி , திரு.திருமலைசாமி , திரு.அய்யப்பன் ஆசாரி , திரு.அம்மன் மெடிக்கல் புகழேந்தி  ........... ஆகியோர் அவார்கள் .மேலும் பல நல்ல உள்ளங்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து மகிழ்ந்தனர்.

அதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் .மேலும் இவர்களுடைய சேவை தொடர வாழ்த்துகிறோம் .

நிகழ்ச்சயில் இருந்து சில பகுதிகள் ...

குழந்தைகள் பஜனை :






ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலையும் , 63 நாயன்மார்கள் வரலாறு சிறு புத்தகம் அன்பளிப்பு :



குழந்தைகளுக்கு  புத்தாடை மற்றும் இனிப்பு வழங்குதல் :









குழந்தைகளுக்கு அன்னதானம் 

நிறைவு 


லோக சமஸ்த சுகினோ பவந்து...

Sunday, 12 October 2014

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை - 5


அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!


மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத் 
தூக்கி அணைந்து அருள் அருணாசலா

மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம் 

மெய் கலந்திட அருள் அருணாசலா!

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்க் சேர்ந்து நீ 

மேன்மை உற்றனை என் அருணாசலா

மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்

மைவசம் ஆக்கினை அருணாசலா

மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ 

நட்டம் ஆடினை என் அருணாசலா

மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என் 

மோகம் தீராய் என் அருணாசலா

மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால் 

மௌனம் இது ஆமோ அருணாசலா

யவன் என் வாயில் மண்ணினை அட்டி 

என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

யாரும் அறியாது என் மதியினை மருட்டி 

எவர் கொளை கொண்டது அருணாசலா

ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை 

ரமித்திடச் செயவா அருணாசலா 

ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் 

ரமித்திடுவோம் வா அருணாசலா

லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா

லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று 

லாபம் என் உற்றனை அருணாசலா

வரும்படி சொலிலை வந்துஎன் படி அள 

வருந்திடு உன் தலைவிதி அருணாசலா

வாவென்று அகம் புக்கு உ ன் வாழ்வு அருள் அன்றே என் 

வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா

விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர் 

விட்டிட அருள்புரி அருணாசலா

வீடு விட்டு ஈர்த்து உள வீடு புக்குப் பைய உன் 

வீடு காட்டினை அருள் அருணாசலா

வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா

வேதாந் தத்தே வேறு அற விளங்கும்

 வேதப் பொருள் அருள் அருணாசலா

வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா

 வைத்து எனை விடாது அருள் அருணாசலா 

அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை 

அன்பாக் கரைத்து அருள் அருணாசலா

அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன் உன் 

அருள்வலை தப்புமோ அருணாசலா

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச் 

சிறையிட்டு உண்டணை அருணாசலா

அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு 

அன்பன் ஆயிட அருள் அருணாசலா

என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ 

எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா

என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என் 

புன் மொழி கொள அருள் அருணாசலா

பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்

 பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா

மாலையளித்து அருணாசல ரமண என் 

மாலை அணிந்து அருள் அருணாசலா 

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!


அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி
அக்ஷர மணமாலை வாழி...


ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய...............

Saturday, 11 October 2014

சிவார்ச்சனா சந்திரிகை - 3



சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை

சங்கிதாமந்திரங்களாலாவது, காயத்திரியாலாவது மூன்று முறை பிராணாயாமஞ் செய்து, ஹெளம் நேத்திராப்பியாம் நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டை விரல்களால் கண்களில் திவ்விய முத்திரையை நியாசஞ் செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தால் ஜலத்தை நிரீக்ஷணஞ் செய்து (பார்த்து), அதேமந்திரத்தால் தாடனஞ்செய்து (அடித்து), வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அப்பியுக்ஷணஞ் செய்து, அந்தப் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தால் அங்குசமுத்திரை செய்து, விந்துத்தானத்திலிருந்து கங்கை முதலிய நதிகளுள் யாதானுமோர் தீர்த்தத்தை அகருஷணஞ் செய்து (இழுத்து), உத்பவ முத்திரை செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதயமந்திரத்தால் அந்தத் தீர்த்தத்தை ஜலத்தில் விட்டதாகப் பாவனை செய்து, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்து, ஹ§ம்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணம் செய்து நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அவகுண்டனஞ் செய்து, வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்திமந்திரத்தால் தேனு முத்திரை செய்து, அந்தத் தீர்த்தத்தை அமிர்தமயமாகச் செய்யவேண்டும். பின்னர், சந்தியாதிட்டான தேவதையைத் தியானஞ் செய்யவேண்டும்.
சந்தியானது பிராஹ்மீ, வைஷணவீ, ரௌத்திரீ என மூன்று வகைப்படும். அவற்றுள்,

பிராஹ்மீ தேவதை

இரத்தமாலை இரத்த வஸ்திரங்களை யுடையவளாயும், சிவந்த வர்ணமுடையவளாயும், சிவந்த அலங்காரத்தால் சோபிக்கப்பட்டவளாயும், அன்ன ஆசனத்திலுட்கார்ந்திருப்பவளாயும், யக்ஞ சூத்திரம் சடைகளைத் தரித்திருப்பவளாயும், நான்குகைகளும், நான்கு முகமும் உடையவளாயும், எட்டுக் கண்களால் அலங்காக்கப் பெற்றவளாயும், உருத்திராட்ச மாலையும், சுருக்கும் வலது கையிலும், தண்டும் கமண்டலமும் இடது கையிலும் தரித்துக் கொண்டிருப்பவளாகவும், பிரமாவைத் தேவதையாக வுடையவளாகவும், பிராஹ்மீயென்னும் பெயருடைய பிராதச் சந்திரயா தேவதையானது இருக்கும்.
இந்தப் பிராஹ்மி சந்தி மூன்று வகைப்படும். அவற்றுள், பிராதக் காலத்தில் சில நக்ஷத்திரங்கள் மாத்திரம் இருக்கும் பொழுது சுபாலை என்னும் பெயருடன் ஒரு சந்தியிருக்கும். இது முத்தியைக் கொடுக்கிறதாயும், சாமர்த்திய முடையதாயுமிருக்கும். மற்றொருசந்தி பிராதக்காலத்தில் நக்ஷத்திரங்களில்லாத பொழுது மத்திமாவென்னும் பெயருடன் புத்திமுத்திகளைக் கொடுகிக்றதாயும், ஞானசத்தி சொரூபமாயும், பாலப்பருவத்தை யுடையதாயுமிருக்கும். மற்றொரு சந்தி சூரியனுடைய பாதி மண்டலம் கண்ணுக்குப் புலப்படும் பொழுது பிரௌடாவென்னும் பெயருடன் புத்தியைக் கொடுக்கிறதாயும் கிரியாசத்தி சொரூபமாயும், பாலப்பருவத்தையுடையதாயுமிருக்கும்.

வைஷ்ணவீ தேவதை

சுவர்ணத் தாமரையில் உட்கார்ந்துதிருப்பவளாயும், வெண்மையான வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளாயும், வனமாலை உபவீதங்கள் தரிக்கப்பட்டு இரண்டு கண்களும், ஒரு முகமும், நான்கு கைகளும் உடையவளாயும், கதை, தாமரைகளை வலது கையிலும், சங்கம் சங்கரங்களை இடது கையிலும் தரித்திருப்பவளாயும், பிராஹ்மி சந்திக்கும் ரௌத்திரி சந்திக்கும் நடுவேயிருக்கும் இந்த வைஷ்ணவீ சந்தி தேவதையானது இரண்டாவது யாமத்தினுடைய நாலாவது பாகத்தில் மூன்று விதமாக இருக்கும். அவற்றுள், முதலாவது சந்தி தேவதையானது முத்தியைக் கொடுக்கிறதாயும் சிறிது தோன்றிய யௌவனத்துடனுமிருக்கும். இரண்டாவது சந்தி தேவதையானது மத்திமமான தருணத்துடுன் புத்தி முத்திகளைக் கொடுக்கிறதாய் வாகீசுவரி சொரூபமாயிருக்கும், வாகீசுவரி - சரஸ்வதி. மூன்றாவது சந்தி தேவதையானது சுவாலை என்னும் பெயருடன் முத்தியைக் கொடுக்கிறதாய் பிரௌடமான யௌவனத்துடனிருக்கும்.

ரௌத்திரி தேவதை

ரிஷபத்தில் தாமரையை ஆசனமாகவுடையவளாயும், மூன்று கண்களையும், சிரசில், சந்திரனையும், புலித் தோலாடையையும், மேகம்போல் கருமை நிறமான வடிவத்தையும், வலது கையில் திரிசூலம் அக்ஷமாலையினையும் இடதுகையில் அபயத்தையும் சக்தியையும் உடையவளாயுமிருப்பள். இது சாயுங்காலத்து அதிட்டான தேவதையெனப்படும். இந்த ரௌத்திரி சந்தி முன்போல் மூன்றுவகைப்படும். அவற்றுள் முதலாவது சந்தி தேவதையானது சூரியனுடைய கிரணங்கள் இருக்குங் காலத்தில் நான்கு பங்கங்களிலும் சிவந்ததாயும், சிறிது நழுவின யௌவனத்துடனம், தன்னைத் தியானஞ் செய்வோருக்கு முத்தியைக்கொடுப்பதாயும், வாமையென்னும் பெயருடனிருக்கும். இரண்டாவது சந்தி தேவதை பாதிச் சூரியனிருக்கும்பொழுது பாதி நழுவின யௌவனமுடையதாயும், போகமோக்ஷங்களைக் கொடுப்பதாயும், சேஷ்டையென்னும் பெயருடனிருக்கும். மூன்றாவது சந்தி தேவதை சூரியன் அஸ்தமனமான பொழுது யௌவனம் நீங்கினதாயும், போகத்தைக் கொடுக்கிறதாயும், ரௌத்திரியென்னும் பெயருடனிருக்கும்.
இவ்வாறு எல்லாவற்றிற்கும் சாக்ஷியாகவும், பூசிக்கப்படுவதால் விருப்பத்தை நிறைவேற்றுவதாயுமுள்ள ஒன்பது விதமான சந்திகள் சிவசாத்திரத்தில் சிவனால் கூறப்பட்டன.
பிராஹ்மிதேவதை இருதயதாமரையிலும், வைஷ்ணவீ தேவதை, விந்துத்தானத்து நடுவிலும், ரௌத்திரி தேவதை பிரமரந்திலும் இருப்பனவாகத் தத்தமக்குரிய காலங்களில் இந்தத் தேவதைகளைத் தியானிக்கவேண்டும்.
சமயதீ¬க்ஷயுடையாருக்குப் பிராதக்கால சந்தியும், விசேடதீ¬க்ஷயுடையாருக்குப் பிராதக்கால சநதி மத்தியான சந்திகளும், நிருவாண தீ¬க்ஷயுடையாருக்குப் பிராதக்காலம் மத்தியானம் சாயுங்காலமென்னும் மூன்று சந்திகளும் உரியன.
எவன் சப்தகலாப் பிராசாத மந்திரங்களில் சமர்த்தனான பண்டிதனாக விருக்கின்றானோ, அவன் விந்துவுடன் கூடி சமனை முதலிய மூன்று தானங்களில் இருப்பனவாயும், தாமரை நூல்போல் சூக்குமையாயும், செம்மை, வெண்மை, கருமை என்னும் மூவகை வர்ணங்களை யுடையனவாயும், கிரியாசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி, என்னும் மூன்று சத்திகளைப் பெயராக வுடையனவாயும், உள்ள மூன்று சந்தியா தேவதைகளைப் பிராசாதமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தியானஞ் செய்யவேண்டும்.
எவன் துவாதச கலாப் பிராசாத மந்திரங்களில் புத்தியை நிலைக்கச் செய்கின்றானோ, அவன் யாதொரு சந்தியானது இரவில் எல்லவற்றினும் மேம்பட்டதாக விளங்குகின்றதோ, அந்த நான்காவது சந்தி தேவதையை நாபி முதல் துவாதசாந்த மீறாகவும், துவாதசாந்த முதல் நாபி ஈறாகவும், போக்குவரவு உடையதாய் ரூபமற்றதாகவாவது, கருமை நிறங்கொண்டதாகவாவது தியானிக்க வேண்டும்.
ஞானிகள், சந்திரனுடைய ஒளியானது சந்திரனைப் பற்றியிருப்பது போல், யாதொரு மேம்பட்ட சந்திதேவதையானது துவாதசாந்தத்திலிருக்கும் பரமசிவனைப் பற்றியிருக்கின்றதோ, அத்தகைய மேன்மை வாய்ந்த சிவஞான சொரூபமான சந்தி தேவதையை தியானிக்க வேண்டும்.
உண்மையில் சிவ சத்தி சொரூபமான சந்தியா தேவதையொன்றுதான். அதுவே காலம், அதிகாரி, என்னுமிவற்றின் பேதத்தால் மூன்று வகையாகப் பிரிந்தன. இவ்வாறு செய்யும் சந்தி தேவதையின் தியானமே சந்தியாவந்தனமெனக் கூறப்படும். பிரதானமான இந்தச் சந்தியாவந்தனத்திற்கு மார்ஜனம் முதுலியன அங்கங்களாகும். இவ்வாறு சந்தி தேவதையை உபாசித்த புருடர் சிவபூஜையைத் தொடங்கல் வேண்டும்.

சிவபூஜையின் முறை

பின்னர், கட்டை விரலை இசானராகவும், அணிவிரலை அமிர்தகலையாகவும் தியானஞ்செய்து, கட்டைவிரலுடன் கூடின அணிவிரலால் கண்களையும், மூக்குகளையும், காதுகளையும், தோள்களையும், இருதயத்தையும், தொப்புளையும், சிரசையும் முறையே சூரியன் சந்தோஷமடையட்டும், விஷ்ணு சந்தோஷமடையட்டும் என்பது முதலாகப்பாவனை செய்துகொண்டே தொடல் வேண்டும்.
அவ்வாறு செய்யுங்காலத்துச் சிவ தேஜசின் சேர்க்கையோடு கூடிய அணி விரலினின்றும் உண்டான அமிர்தப் பிரவாகத்தால் திருப்தியடைந்த கண் முதலியவற்றிற்கு அதிஷ்டான தேவதைகளான சூரியன் முதல் விஷ்ணுவீறாகவுள்ள தேவர்கள், பூசிப்பவனுக்குப் பூசை செய்வதில் சாமர்த்தியத்தை விருத்தி பண்ணுகிறவர்களாக ஆகின்றனர்.

ஆசமன விதி

பின்னர், சரீரத்திலுள்ள முப்பத்தைந்து தத்துவங்களின் சுத்தியின் பொருட்டுச் சிந்மாத்திர ஆசமனஞ் செய்யவேண்டும். செய்யுங்காலத்துச் சுவர்ணநிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சுருக்கு, குண்டிகை, என்னுமிவைகளைத் தரித்திருக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், நான்கு முகங்களையுடையவராயும் ஆன்மதத்துவருபமாயுமுள்ள பிரமாவைத் தியானஞ் செய்கிறேனென்று ஆன்மதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹாம் ஆத்மதத்துவாயஸ்வதா என்று முதலாவது ஆசமனஞ் செய்ய வேண்டும். இதனால் தன் சரீரத்தில் பிருதிவி முதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தியடைந்ததாகப்பாவிக்க வேண்டும்.
பின்னர், நீலநிறமுடையவராயும், சக்கரம், பாணம், தாமரை, சின்முத்திரை, சங்கம், வில்லு, கமண்டலம், அபயமுத்திரை என்னும் இவைகளையுடைய எட்டுக்கைகளையுடையவராயும், ஒரு முகத்தையுடையவராயும் உள்ள விஷ்ணுவை வித்யாதத்துவ ரூபமாகத் தியானஞ் செய்கிறேனென்று வித்தியாதத்துவத் தியானத்தைச் செய்து, ஹிம் வித்தியா தத்துவாய ஸ்வதா என்று இரண்டாவது ஆசமனஞ் செய்யவேண்டும். இதனால் சுத்த வித்தை, ஈசுவரம், சதாசிவம் என்னும் மூன்று தத்துவங்களும் சுத்தியடைந்ததாக பாவிக்கவேண்டும்.
பின்னர், படிக நிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சூலம், கமண்டலமென்னும் இவற்றைத் தரிக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், ஐந்து முகங்களையுடையவராயும், உள்ள உருத்திரனைச் சிவதத்துவ ரூபமாகத் தியானம் செய்கிறேனென்று சிவதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹ§ம் சிவதத்துவாயஸ்வதாயென்று ஆசமனஞ் செய்யவேண்டும். இதனால் சத்திதத்தவம் சுத்தியடைந்ததாகப் பாவிக்கவேண்டும்.
பின்னர், அஸ்திரமந்திரத்தால் உதட்டை இருமுறை துடைத்து, ஹிருதயமந்திரத்தால் நேத்திரம் முதலியவற்றைத் தொடல்வேண்டும். மற்ற அந்தந்தத் தேவதைகளின் தியானங்களை முன்போல் செய்ய வேண்டும். ஆசமனமுறை முடிந்தது.

சிவபூஜையின் சுருக்கம்



சிவபெருமானைப் பத்மாசனத்திலெழுந்தருளச் செய்து அபிஷேகஞ் செய்து, ஆசனத்தையும், மூர்த்தியையும், வித்தியாதேகத்தையும் பூசிக்கவேண்டும். பின்னர்ப் பரமசிவனை ஆவாகனஞ் செய்து ஸ்தாபனம் சன்னிதானம் முதலியவற்றால் பூசித்து மனத்தால் அபிஷேகஞ்செய்வித்து வஸ்திரம் உபவீதங்களைத் தரிக்க வேண்டும். பின்னர்ச்சந்தனம், புஷ்பம், ஆபரணங்களால் அலங்கரித்துத் தூபதீபம் சமர்ப்பித்து அதன் பின்னர் ஆவரணபூசை செய்து நைவேத்தியம், முகவாசம், தாம்பூலம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்துத் தூபம் ஆராத்திரிகஞ்செய்து, பவித்திரஞ்சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் வெண்மையான விபூதியைத் தரித்துக் கண்ணாடி முதலியவற்றால் உபசாரஞ்செய்து, அதன் பின்னர் பலிகொடுத்து பாத்திய முதலியவற்றாலும் சந்தனம் புஷ்பங்களாலும் உபசாரஞ் செய்யவேண்டும். பின்னர் செபம், தோத்திரம் நமஸ்காரம், பிரதக்ஷிணங்களைச்செய்து அட்டபுட்பங்களாலருச்சித்து விசேஷ அர்க்கியத்தால் பூஜைசெய்ய வேண்டும். பின்னர் ஆவரண தேவதைகளுடன் சிவபெருமானைப் பராங்முகார்க்கியத்தால் எழுந்தருளச்செய்து உரிய காலத்தில் மனத்தின்கண் சிவபெருமானை இருத்தி நிவேதனஞ் செய்த அன்னத்தை உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு சிவபூஜா முறையில் சுருக்கம் அறிந்து கொள்க.

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை - 4


அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!


நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில் 
நாடி உட்கொள் நலம் அருணாசலா

நொந்திடாது உன்தனைத் தந்து எனைக் கொண்டிலை 

அந்தகன் நீ எனக்கு அருணாசலா

நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம் 

ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா

பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள் 

பற்றிட அருள்புரி அருணாசலா

பார்த்தருள் மால் அறப் பார்த்திலை எனின் அருள் 

பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா

பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள் 

பித்தம் தெளி மருந்து அருணாசலா

பீதி இல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்

பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா

புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை 

புல்லிடவே அருள் அருணாசலா

பூமண மா மனம் பூரண மணம் கொளப் 

பூரண மணம் அருள் அருணாசலா

பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன் 

பெருமை யார் அறிவார் அருணாசலா 

பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப் 

பேயன் ஆக்கினை என் அருணாசலா

பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல் 

பற்றுக் கோடாய்க் கா அருணாசாலா

பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன் 

போதத்தைக் காட்டினை அருணாசலா

போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட் 

போராட்டம் காட்டு அருணாசலா

பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன் 

பவிசு கண்டுற அருள் அருணாசலா

மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள் 

மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து 

அபிமான மில்லாது ஒளிர் அருணாசலா

மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான் 

வஞ்சியாது அருள் எனை அருணாசலா

மீகாமன் இல‍்லாமன் மாகாற்று அலை கலம் 

ஆகாமல் காத்தருள் அருணாசலா

முடி அடி காணா முடி விடுத்து அனைநேர் 

முடிவிடக் கடனிலை அருணாசலா

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!