ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி சேவா அறக்கட்டளை, பழனி
நேற்று என் வாழ்கையில் ஒரு நல்ல நாளாக அமைந்தது.
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை 2 ம் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது . கூடவே ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி சேவா அறக்கட்டளை துவக்க நாளாக அமைந்தது. பழனி புலிப்பாணி ஆதினம், பழனி ஸ்தானிக சங்கம் முதலான் பெரியோர்கள் முன்நிலையிலும் இறைவன் மற்றும் குருநாதர்கள் அருளலும் இனிதே துவங்கபட்டது . அதன் சேவை பணிகளவான .....
1) தேவாரம் திருவாசகம், நால்வர் மற்றும் ஆன்மீக தொண்டு பற்றிய விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் கொண்டு செல்லுதல்
2) மழலையர் துவக்க பள்ளி ஆரம்பித்தல்
3) மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பராமரிப்பு கூடம் அமைதல்
4) பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் போட்டு தருதல்
5) திருவிழா நாட்களில் பழனியில் மருத்துவ முகாம் அமைதல்
6) பழனி மலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறபடுதுதல்
7) சீமை கருவேல மரங்களை வேரறுத்தல் அதை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தல்.
8) வயதானவர்களுக்கு வீட்டு வரி ,இதர வரிகளை செலுத்தி அவர்களுக்கு உரிய ரசீதை பெற்று தருதல்.
அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் ....
மேலும் இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பழனி அடிவாரத்தில் உள்ள சற்குரு ஆலயத்தில் முதன் முதலில் பௌர்ணமி விளக்கு பூஜைம் நடைபெற்றது ......
மேலும் ஒவ்வொரு ஹஸ்தம் நட்சத்ரம் அன்று சிறப்பு வழிபாடும் தினமும் மதியம் அபிஷேகமும் அன்னதானமும் (மகேஸ்வர பூஜை ) நடைபெறுகிறது .... பழனி மலை கிரிவல பாதையில் உள்ள இடும்பன் குடில் மத்தியில் சற்குரு சுவாமிகள் சமாதி ஆலயம் உள்ளது .....அனைவரும் வருக குருவருள் பெருக ...........
ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை ...............

No comments:
Post a Comment