Sunday, 30 November 2014

A. P. J. Abdul Kalam Quotes


1) You have to dream before your dreams can come true.

2) If a country is to be corruption free and become a nation of beautiful minds, I strongly feel there are three key societal members who can make a difference. They are the father, the mother and the teacher.

3) Look at the sky. We are not alone. The whole universe is friendly to us and conspires only to give the best to those who dream and work.

4) My message, especially to young people is to have courage to think differently, courage to invent, to travel the unexplored path, courage to discover the impossible and to conquer the problems and succeed. These are great qualities that they must work towards. This is my message to the young people.

5) To succeed in your mission, you must have single-minded devotion to your goal.



6) The world has today 546 nuclear plants generating electricity. Their experience is being continuously researched, and feedback should be provided to all. Nuclear scientists have to interact with the people of the nation, and academic institutions continuously update nuclear power generation technology and safety.

7) Educationists should build the capacities of the spirit of inquiry, creativity, entrepreneurial and moral leadership among students and become their role model

8) We will be remembered only if we give to our younger generation a prosperous and safe India, resulting out of economic prosperity coupled with civilizational heritage.

9) Unless India stands up to the world, no one will respect us. In this world, fear has no place. Only strength respects strength.

10) Life is a difficult game. You can win it only by retaining your birthright to be a person.



Wednesday, 26 November 2014

BLACK HOLE


BLACK HOLE 

are out there .........

But , What are they ?

The Mass of the Earth Creates The Gravity that Pulls things to the ground  with enough power.
we can escape the gravity and the leave the earth behind. But if you could take the Earth and squeeze it to the size of marble the gravity of the surface would be much greater not even a beam of light could escape We call this is a BLACK HOLE. Fortunately neither the Earth nor the Sun will ever become a Black Hole. But, Black holes do the exist........ Black holes Gravity's Relentless pull.

The nearest black hole is many lightyears away from the Earth,  Black holes of stellar mass are expected to form when very massive stars collapse at the end of their life cycle. After a black hole has formed, it can continue to grow by absorbing mass from its surroundings. By absorbing other stars and merging with other black holes, super massive black holes of millions of solar masses may form. There is general consensus that super massive black holes exist in the centers of most Galaxies.

The name "black hole" was introduced by John Archibald Wheeler in 1967. It stuck, and has even become a common term for any type of mysterious bottomless pit. Physicists and mathematicians have found that space and time near black holes have many unusual properties. Because of this, black holes have become a favorite topic for science fiction writers. However, black holes are not fiction. They form whenever massive but otherwise normal stars die. We cannot see black holes, but we can detect material falling into black holes and being attracted by black holes. In this way, astronomers have identified and measured the mass of many black holes in the Universe through careful observations of the sky. We now know that our Universe is quite literally filled with billions of black holes.


n 1687, Isaac Newton showed that all objects in the Universe attract each other through gravity. Gravity is actually one of the weakest forces known to physics. In our daily life, other forces from electricity, magnetism, or pressure often exert a stronger influence. However, gravity shapes our Universe because it makes itself felt over large distances. For example, Newton showed that his laws of gravity can explain the observed motions of the moons and planets in the Solar System.

Albert Einstein refined our knowledge of gravity through his theory of general relativity. He first showed, based on the fact that light moves at a fixed speed (671 million miles per hour), that space and time must be connected. Then in 1915, he showed that massive objects distort the four-dimensional space-time continuum, and that it is this distortion that we perceive as gravity. Einstein's predictions have now been tested and verified through many different experiments. For relatively weak gravitational fields, such as those here on Earth, the predictions of Einstein's and Newton's theories are nearly identical. But for very strong gravitational fields, such as those encountered near black holes, Einstein's theory predicts many fascinating new phenomena.

All matter in a black hole is squeezed into a region of infinitely small volume, called the central singularity. The event horizon is an imaginary sphere that measures how close to the singularity you can safely get. Once you have passed the event horizon, it becomes impossible to escape: you will be drawn in by the black hole's gravitational pull and squashed into the singularity.

The size of the event horizon (called the Schwarzschild radius, after the German physicist who discovered it while fighting in the first World War) is proportional to the mass of the black hole. Astronomers have found black holes with event horizons ranging from 6 miles to the size of our solar system. But in principle, black holes can exist with even smaller or larger horizons. By comparison, the Schwarzschild radius of the Earth is about the size of a marble. This is how much you would have to compress the Earth to turn it into a black hole. A black hole doesn't have to be very massive, but it does need to be very compact!

Some black holes spin around an axis, and their situation is more complicated. The surrounding space is then dragged around, creating a cosmic whirlpool. The singularity is an infinitely thin ring instead of a point. The event horizon is composed of two, instead of one, imaginary spheres. And there is a region called the ergosphere, bounded by the static limit, where you are forced to rotate in the same sense as the black hole although you can still escape.

What is inside a black hole?

We cannot glimpse what lies inside the event horizon of a black hole because light or material from there can never reach us. Even if we could send an explorer into the black hole, she could never communicate back to us.

Current theories predict that all the matter in a black hole is piled up in a single point at the center, but we do not understand how this central singularity works. To properly understand the black hole center requires a fusion of the theory of gravity with the theory that describes the behavior of matter on the smallest scales, called quantum mechanics. This unifying theory has already been given a name, quantum gravity, but how it works is still unknown. This is one of the most important unsolved problems in physics. Studies of black holes may one day provide the key to unlock this mystery.

Einstein's theory of general relativity allows unusual characteristics for black holes. For example, the central singularity might form a bridge to another Universe. This is similar to a so-called wormhole (a mysterious solution of Einstein's equations that has no event horizon). Bridges and wormholes might allow travel to other Universes or even time travel. But without observational and experimental data, this is mostly speculation. We do not know whether bridges or wormholes exist in the Universe, or could even have formed in principle. By contrast, black holes have been observed to exist and we understand how they form.
    

Sunday, 23 November 2014

'ஏகாதசி' விரத மகத்துவம்

சுத்தம் பாகவதஸ்யான்னம் சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணுபத த்யானம் ஸுத்தம் ஏகாதசி வ்ரதம். 



ஏகாதசி ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க்க மோக்ஷப்ரதா
ஏஷா ராஜ்ய புத்ரப்ரதாயினீ...

ஏகாதசி விரதம் உருவான கதை 

முரன் என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அதோடு எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில் இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன்  சிவபெருமானிடம் சரண் அடைந்தார். அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன் தேவர்களுடனும் முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார். அவர்களைக் காப்பதற்காக இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ முரனுடன் திருமால் போரிட்டார். தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன் திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான். பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால்  திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன் குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக தன் உடைவாளை உருவினான்.

அப்போது  திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள். முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள் அவனைத் தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.. பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.தூக்கம் கலைந்து எழுந்த திருமால் தர்ம தேவதையை ஆசீர்வதித்து அவளுக்கு ‘ஏகாதசி என்று பெயரிட்டார்அந்த ஏகாதசி நன்னாள், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ஆக (11ம் நாள்) இருந்ததால், அன்று முதல், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. 

 ஏகாதசி வகைகள்  

1 ) மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசியில் தொடங்கிய விரதத்தை, பின்னர் வந்த ஏகாதசி நாட்களிலும் அனுஷ்டித்து, பலரும், பல்வகைப் பயன்களைப் பெற்றனர். அப்பயனின் அடிப்படையில், ஒவ்வொரு ஏகாதசிக்கும், அதன் சிறப்பைக் குறிக்கும் அடைமொழி நிலைத்து விட்டது. 

2 ) மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷ) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர். 

3) தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர்.  நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள். 

4) தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் - சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது. 

5) மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரமகத்தி தோஷத்தை போக்கும்   நாளுமாகும் .

6) மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்ற கந்தர்வன்  தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள். 

7 ) பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள். 

8) பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராக்ஷ மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருள வல்லது. 

9) சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள். 

10) சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள். 

11) வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள். 

12) வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள். இதன் பெருமையை வசிஷ்டர் விவரித்து கூறியுள்ளார் .

13) ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள். 

14) ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர். 

15) ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள். 

16) ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள். 

17) ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள். 

18) ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கும்  புத்ரதா என்று பெயர். மஹீஜித் மன்னர் இந்த நாள் விரதமிருந்து புத்திர பேறு அடைந்தார் .

19) புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.

20) புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது. இதை சூரிய வம்ச மன்னர் மாந்தாதா கடைபிடித்து தன் ராஜியத்தில் மழை வருவித்தார் .

21) ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. பிதுர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது ஆகும் .

22) ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஆகும் .  நம் பாவங்களை நீக்கும் அங்குசமாக உள்ளத்தால் இதற்கு பாபாங்குசா என்று பெயர்.

23) கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள். 

24) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி ப்ரபோதினி என்று கூறப்படுகிறது. இன்று பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திரிக்கும் நாளாகும். இன்று துளசியால் பகவானை பூஜிப்பது மிகவும் நலம் .

வருடத்திற்கு 365/366 நாள் என்பதாலும், திதிகளில் கால அளவு குறைந்து, கூடுவதாலும் ஒவ்வொரு ஏகாதசிக்குமிடையே சரியாக 15 நாள் இடைவெளி இல்லாததாலும் 2,3 வருடங்களுக்கொரு முறை, ஒரே வருடத்துக்குள் 25 ஏகாதசிகள் வரும். அது உத்தமோத்தமமான கமலா ஏகாதசி எனப்படும்

25 ) கமலா ஏகாதசி . ஜெயசர்மா என்பவன் இதை கடைபிடித்து தன் வீட்டில் உள்ள கஷ்டத்தை விரட்டி திருமகளை குடியேற்றினான் . மிகவும் அபூர்வமாக வரும் இந்த நாளை கடைபிடிப்பது மிகவும் உயர்ந்தது ஆகும் .

ஏகாதசி விரத முறையும் அதன் மகிமையும் 

அமாவாசையிலிருந்தும்  பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமியன்று  ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன. அதே போல ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன. அதன்பின் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று  அதிகாலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது. அன்று பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

பாரணையில் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று எக்காரணத்தைக் கொண்டும் துளசி இலையை பறிக்கக்கூடாது.
எனவே தேவையான துளசி இலையை  முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும்  முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில் அதை விட கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.


இந்த ஏகாதசியை ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் அநுஷ்டித்திருக்கிறார்கள். அம்பரீஷன் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். அவன் சப்த த்வீபங்களோடு கூடிய ராஜியத்தை ஆண்டுவந்தாலும், அவன் மனசோ பகவானின் பக்தர்களிடமே இருந்தது. அவன் ராஜியத்தில் அதிகமாக கவனத்தைச் செலுத்தவில்லை. ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணுஸ்மரணம், பாத சேவநம், வந்தனம், தாஸ்யம், சக்யம் என்று சொல்லுகின்ற நவவிதபக்தியிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். என்னடா இது இவன் நம்மீதுள்ள பக்தியிலேயே இருந்துவிட்டு வீட்டையும் நாட்டையும் சரியாகக் கவனிக்க மாட்டேன் என்கிறானே என்று பகவானுக்கே தோன்றியதாம்.. அவன் நிலைமை இப்படியே இருந்தால் நாட்டின் நிலைமை வீணாகிவிடுமே என்று நினைத்து, அவன் கேட்காமலேயே சுதர்ஸனத்தைக் கொண்டு அவன் மாளிகையிலே கொண்டுபோய் வைத்துவிட்டானாம் பகவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை என்பதுதான்.
ஒருநாள் அப்படியே யமுனைக்கரைக்குப் போனான். பந்தலைப் போட்டான். ஒரு வருஷத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி எவ்வளவு நாழிகை இருக்கிறதோ அதற்குள்ளே பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து அதில் மீதம் வந்ததை உண்டு விரதம் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்கிறான். ஆயிரக்கணக்கான வேதவித்துக்களை அழைத்து அவர்களுக்கு போஜனம் செய்வித்து, வேண்டுகிற தானங்களைக் கொடுத்து, கோதானம் செய்து… இப்படி ஒரு வருஷம் முடியப்போகிறது. அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசியும் வந்தது. வழக்கம் போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான். இன்னும் அவனும் அவனுடைய பத்னியும் சாப்பிடவேண்டும்.
அப்போதுதான்…. துர்வாசர் வந்தார். முனிவர் வந்தவுடனே அவரை வரவேற்று, ஸ்வாமி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்… வாருங்கள். போஜனம் செய்து அடியேனுக்கு பிரசாதத்தை வழங்கவேணும் என்று பிரார்த்தித்தான் அம்பரீஷன். துர்வாசரோ ம் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி மெதுவாகக் கிளம்புகிறார். இன்னும் அரை நாழிகைதான் பாக்கியிருக்கிறது. அதற்குள்ளாக அம்பரீஷன் துர்வாசருக்கு போஜனம் செய்வித்து இவனும் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் அந்த துவாதசி பாரணையை முடிக்கவில்லையென்றால் அந்த ஒரு வருஷ ஏகாதசி விரதம் போச்சு…
ஆனால் துர்வாசரோ வேண்டுமென்றே அடிமேல் அடிவைத்து மந்தகதியிலே போகிறார். பரார்த்திசீல: என்றபடி பிறரை கஷ்டப்படுத்தி அதிலே இன்பம் காண்கிற சாடிஸ்ட் டாக அப்போது துர்வாசர் … இவனோ இன்னும் அந்த குறுகிய காலத்துக்குள்ளே விரதத்தை முடித்தாக வேண்டும். போனவரோ இன்னும் காணவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மனசிலே தவிப்பு. அப்போது அங்கிருந்த பெரியவர்களை அணுகி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று உபாயம் கேட்கிறான். எல்லாவற்றுக்கும்தான் பிராயச்சித்தம் இருக்கிறதே! பெரியவர்கள் சொன்னார்கள் … ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசி இலையையும் போட்டு ஆசமனம் செய்து பகவத் பிரசாதமாக அதை உட்கொண்டுவிடுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு. சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள்… அவரை விட்டு விட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது… என்றார்கள்.
அவன் உட்கார்ந்து ஆசமனம் செய்யப் போனான். அப்போது சரியாக துர்வாசரும் வந்துவிட்டார். அம்பரீஷன் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்துவிட்டுக் கேட்டார்…
என்ன செய்கிறாய்…?
பாரணை…!
என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாகச் சொன்னாயே. உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்…. என்று சொல்லிவிட்டு தன் ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. என்னை அவமானப்படுத்திய அம்பரீஷனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டு வா என்று அந்த பூதத்தை ஏவினார். அம்பரீஷனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் அப்படியே நின்றுவிட்டான். பூதம் பாய்ந்தது. ஆனால் அவன் பூஜையறையிலே இருந்தாரே சுதர்ஸனாழ்வார்.. அவர் அப்படியே கிளம்பிவிட்டார்.
அவ்வளவுதான் பூதம் க்ளோஸ். பிறகு அப்படியே திரும்பி துர்வாசரை முறைக்க, அவரும் ம்ம்ம்… என்று கர்ஜிக்க… துர்வாசர் விஷயம் ஒன்றும் எடுபடவில்லை. அவ்வளவுதான் அவர் அப்படியே திரும்பி ஓட, சுதர்ஸனச் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. ஓடினார் ஓடினார்… சமுத்திரத்துக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். ஆனால் சுதர்ஸமோசமுத்திரத் தண்ணீரை கரையிலிருந்துகொண்டே அப்படியே உறிந்து கொண்டது.
தொடர்ந்து ஓடினார். மேருபர்வதக் குகைக்குள்ளே ஒளிந்து கொண்டார். அதுவோ குகையை ரெண்டாகப் பிளந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து நேரே பிரம்ம லோகம் போனார். பிரம்மாவிடம் போய் தஞ்சம் கேட்டார். அவரோ, அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களிலேயே ச்ரேஷ்டமானவன்.. அவனுக்குப்போய் அபசாரம் செய்துவிட்டீரே. பகவானுக்கு அபசாரம் பண்ணினாலும் அவன் பொறுத்துக்கொள்வான். அவன் பக்தனுக்குப் பண்ணினால் பொறுத்துக் கொள்வானோ? நீர் நிற்கும் இடம் தெரிந்தால் சுதர்ஸம் இந்த இடத்தையே துவம்சம் பண்ணிவிடும். நீர் இடத்தை விட்டுக் கிளம்பும் என்றார்…
அங்கிருந்து ஓடி சிவபிரானைத் தஞ்சம் புகுந்தார். அவரோ அப்பனே சுதர்ஸனத்திற்கு உன்மீது கோபம் வந்துள்ளது. அது நாங்கள் சொன்னால் எல்லாம் கேட்காது. நாராயணன் சொன்னால்தான் கேட்கும். நீர் அவரிடமே தஞ்சம் புகுந்து கொள்ளும் என்றார்.
அவர் விஷ்ணுவை நோக்கி ஓடினார். அவரைத் தஞ்சம் புகுந்து பிராத்தித்தார். விஷ்ணுவோ, ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சுதர்ஸனம் என் கண்ட்ரோலில் இல்லை. நான் அதை அம்பரீஷனுக்கு லீசுக்குக் கொடுத்துவிட்டேன். அம்பரீஷனை யாரென்று நினைத்தீர். அவன் என் பக்தன் இல்லை. என் எஜமான். அவனுக்கு நான் தாஸன். வேறு வழியில்லை. நீர் அவனிடமே போய் தஞ்சம் புகுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்… என்றார்.
வேறு வழியில்லாமல் துர்வாசரும் அம்பரீஷனிடம் வந்தார். அதற்குள் ஒரு வருஷம் முடிந்துவிட்டது. அப்பனே மூன்று லோகங்களுக்கும் போய்விட்டேன். இப்போதுதான் உன் மகிமை தெரிந்தது. அந்த சுதர்ஸனச் சக்கரத்திடம் கொஞ்சம் சொல்லப்பா! என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதை கண்ட அம்பரீஷன்  சுதர்ஸநத்தை பிரார்த்திக்க அவர் மீண்டும் பூஜை அறையில் சென்று அமர்ந்து கொண்டார் . துர்வாசருக்கும் அம்பரீஷன் மற்றும் ஏகாதசி விரத மகிமை புரிந்தது . ஏகாதசி விரத மகிமை அப்படிப்பட்டது

ஏ காதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம்

ஹே ஜனங்களே!ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு செய்யத் தக்கன - அதாவது இரண்டு கார்யம் செய்யத் தக்கன

முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது.

ஏகாதசியும் சிரார்த்தமும்:

 ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது என்பர். இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டுமென்பதால், ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படும் அந்தணர்களும், நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை. சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது


ஏகாதசியும் அறிவியல் உண்மையும்
   


ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும்,பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில்அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம்எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

ஏகாதசி தினத்தில் சுமார் 120 டிகிரிலிருந்து 132 டிகிரியில் இருக்கும் அப்பொழுது பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை முக்கோண நிலையில் அமைகின்றன. இக்காரணத்தினால் ஏகாதசி விரதம் மிகச்சிறந்த விரதம் ஆகும். 
ஏகாதசி நாளில் சந்திரனின் ஈர்ப்பு பூமியில் அதிகமாக இருக்கும். இதனால் மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மனித உடலில் 80% தண்ணீர் நிறைந்து உள்ளதால் இப்பாதிப்பு சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படுகிறது. 
அந்நாளில் நம்முடைய ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காமல் இருக்கும். அதனால் தான் அன்று உணவை ஒதுக்கி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் கூறினார்கள். 
இந்நாளில் தியானம் செய்பவர்களுக்குச் சந்திரனின் ஆற்றல் நல்ல சக்தியைக் கொடுக்கும். அடுத்தநாள் துவாதசி திதியானது திருவோண நட்சத்திரதில் வந்தால் அதுவும் புதன்கிழமை ஆக இருந்தால் அன்றும் ஏகாதசி போன்று விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அந்த நாள் மிகவும் புனித நாளாகும்.    

மஹா பெரியவா இதை தன் வாக்கில் மூலமாக கூறும் போது .....

வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.

ந காயத்ர்யா பரம் மந்த்ரம் ந மாது பர தைவதம் *
ந காச்யா பரமம் தீர்த்தம் நைகாதச்யா ஸமம் வ்ரதம் **

'காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை;அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை) ;காசிக்கு மேலே தீர்த்தமில்லை'என்று சொல்லிக் கடைசியில் 'ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதுமெதுவுமில்லை'என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் 'மேலே'ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு 'ஸமமாக'ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு 'மேலே'மட்டுமில்லாமல், அதற்கு 'ஸமமாக'க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிற்ப்பித்துச் சொல்லியிருக்கிறது.

அஷ்ட வர்ஷாதிக மர்த்ய அபூர்ணாசீதி வத்ஸர :*
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ உபயோ அபி **

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், 'மர்த்ய', அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது. என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்;அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை 'எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி'னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை;ரூலாகப் போடவுமில்லை.

பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.

இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாத்தைக் கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அலௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம் .

அதலால் ஏகாதசி விரதமிருந்து பல நலன்கள் பெற அனைவரையும் வேண்டுகிறோம் .

Monday, 17 November 2014

ராம நாம மகிமை

சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் , “” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் ஆகும் .  ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணி” ராகத்திலமைந்த “எவரனி” என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு ஜீவமு” என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு” என்றும் பாடியருளியிருக்கிறார்.

ராம நாமம் என்பது மிகவும் உன்னதமான நாமம் "ராமேதீ ராமா" மூன்று பெயருக்கும் அர்த்தம் உண்டு. நம்முடைய துக்கத்தையெல்லாம் போக்கடிப்பவர் ராமன். "ராமேதி ராமா" ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் ராமன் என்று பெயர். தசரதர் காலம் முதல் பழங்காலம் தொட்டு எத்தனையோ பேருக்கு வாழ்க்கையிலே துனபத்தையெல்லாம் போக்கி, ஆனந்தத்தை அளித்த பரம்பொருள். அந்த பரம்பொருளின் நாமம், மஹாவிஷ்ணு குரு வடிவத்திலே இருந்து ஸ்ரீ ராமனாக தசரதகுமாரனாக அவதாரம் செய்தார். தசரதருக்கு வெகு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்ததனால் இந்த துன்பம் எல்லாம் நீங்குவதுடன் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட பொழுது துன்பங்கள் எல்லாம் நீக்கி ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய பெயர் 'ராமன்' என்ற பெயரை வைத்தார்கள். உபநிஷத்திலேயிருந்து ராமனுடைய நாமம் விளங்கி வருகிறது. தசரதர் மெய்மறந்து அந்த பெயரை வைத்தார். தசரதனுடைய குமாரனுக்கு 'ராமன்' என்று பெயரை வைத்தார்களே தவிர 'ராமா ராமா' என்பது அனாதியாக உலகம் தோன்றிய காலம் முதல் உபநிஷத்திலேயிருந்து நாமமாக உள்ளது ராம நாமம். 'தாரக நாமம்' என்று சொல்லுவார்கள். நம்முடைய துக்கங்களை எல்லாம் கடக்க வைக்கக்கூடியது ராம நாமம் என்றும் சொல்லுவார்கள்.


 எத்தனையோ கோடிக்கணக்கான மக்களுடைய துன்பங்களை எல்லாம் கடக்கவைப்பது ராம நாமம். தசரத ராஜாவுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் துன்பங்களை போக்கியதால் 'ராமன்' என்று பெயர் வைத்தார்கள். இப்படி தேவதைகளுடைய துன்பங்கள் எல்லாம் போக்கடித்தார் ஸ்ரீராமன். தாடகா ஸம்ஹாரம் மூலமாக ரிஷிகளுக்கு எல்லாம் வந்த துன்பதைப் போக்கடித்து ஆனந்தத்தைக் கொடுத்தார். பதினான்கு வருடம் காட்டிற்கு யாத்திரை செய்து ரிஷிகளுக்கு எல்லாம் தரிசனம் கொடுத்தார். இப்படி பல செய்கையாலும் பலருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பது 'ராம நாமம்' இன்றைக்கும் பலருக்கும் மனதிற்கு சாந்தியை அளித்து, ஆனந்தத்தை அளிக்ககூடியது 'ராம நாமம்' அப்படிப்பட்ட 'ராம நாமத்தினுடைய' ஜெயந்தி உத்சவம் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் ஒவ்வொருவரும் ராமபிரானை மனதில் நினைத்து ராம நாமத்தை ஜெபித்து நம்முடைய வாழ்க்கையிலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று எல்லோரும் சொல்லவேண்டும். ராமனுடைய ஆட்சி காலத்திலே உலகிலே உள்ள பொருள்கள் இன்றைக்கு விலையேறி கிடந்தும் கிடைக்காத நிலையில் இருப்பது போல் அன்றைக்கு பொருள்கள் கிடைக்காத நிலையிலிருந்தும் வருந்திக்கொண்டு அத கிடைக்கவில்லை. இது கிடைக்கவில்லை அந்தப் பொருள் இல்லை என்று அழவில்லை "ராமோ ராமோ ரானமதி இராஹா மனோ கதாஹா:" ராம ராஜ்யம் உலகம் முழுவதும் ராமமே ராஜ்யம் உஷ சகி. ராமன் ராஜ்ய பரிபாலனம் பண்ணும் போது ராமா ராமா என்று சொல்லுகின்ற ஜனங்கள் அரிசியில்லை, உளந்து இல்லை, கிருஷ்ணாயில் இல்லை, கறிகாய் இல்லை என்று ஒருவரும் அழவில்லை. அப்படிப்பட்ட நிலையை நம்முடைய நாட்டில் திரும்பவும் கொண்டு வர உலகம் முழுவதும் ராமா ராமா ராமா என்று ஜபத்தை ஜபித்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களும் அகலுவதற்கும், மனிதனுடைய துன்பங்கள் எல்லாம் அகலுவதற்கும், நல்ல புத்தி கிடைப்பதற்கு "ஸப்கோ சன்மதி ஹே பகவான்" என்று பிரார்த்தனை செய்து எல்லோருக்கும் நல்ல புத்தி கிடைப்பதற்கு ராமபிரான் அருள்வாராக.

ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள் தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும் பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

 எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம்.  இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே!  

 நமது  இலட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

நமது  பயணத்தில்  பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும்.

காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது ) ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.

 வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும். 

ராம  நாமா  அதிர்வு  நமது   ரத்தத்தில்  உள்ள  DNA  மற்றும்  gene coding...இல்  உள்ள   குணங்களுக்கு  காரணமான ........கோபம் , வெறுப்பு,  பொய்,  பொறாமை , சூது,  போன்ற   தீய  குணங்களின்  தன்மைகளுக்கு  காரணமான....gene coding யை  அழித்து ...ராம  நாம  அதிர்வு  ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு  காரணமான   ராமரின்  குணங்களை  ஏற்படுத்தும்.('யத்  பாவோ  தத்  பவதி'--எதை  நினைக்கிறாயோ  அதுவே  ஆகிறாய்!)

 'ராம  நாமா'  சொல்ல  சொல்ல  .........பரப்ரம்மமே  ஆகிவிடுகிறோம் .

அகில  உலகையும்  வியாபித்து   காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய   சக்தியே  " ராம் ".அதுவே   உருவம்   கொண்டபோது ,  தசரத ராமனாக , சீதாராமானாக,  ரகுராமனாக ,  கோதண்ட ராமனாக  பெயருடன்  ( நாம ரூபமாக )  வந்தது.

உண்மையில்  சத்தியமாம்   ஒரே  உண்மை  ராம்  ஒருவனே. ராம்  அனைத்திலும்  உள்ளான்,  அனைத்தும்   ராமில்  உள்ளன.  ராம்  ஒருவனே  உண்மையான ,  பேரன்பே  வடிவான  உணர்வுமய  வஸ்து .........பிரம்மம்  என்பதும்   அவனே !  இடைவிடாது  ராம  நாமத்தை  ஜெபித்து  வந்தால்  அழியா  இன்பத்தை  ராம்  அருள்வான்  என ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்    தமது  தந்தையிடம்  உபதேசமும்  பெற்று  ராம  நாமத்தில்  கரைந்து  ராம  ரசமாய்,  அதன்  மயமாய்    தானே   ஆனார்.
 நமது  ஒரே  அடைக்கலம் 'ராம  நாமா'.  அதுவே  நம்மை  சம்சார  சாகரத்தில்  இருந்து  கரையேற்றும். பிறவித்தளையை  அறுக்கும் .


வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்  என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர், மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு 33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32 எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின  .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.

அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று

ராம, ராம, ராம’ என ஜெபித்தாலே போதும்; எல்லா புண்ணியங்களும் கிடைத்து, முக்தியையும் அளிக்கும் என்று கூறுவர். 

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள்



தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.

இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.
ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.

இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள்.  இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்
ஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.

அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா

என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.
இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.
திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.
இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.

கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.

போதேந்திர ஸ்வாமிகள்

                                                             



இந்தியாவில் உள்ள ஏழு மோக்ஷபுரிகளில், தென் திசைக்குப்  பெருமை சேர்க்கும் அற்புதமான காஞ்சி மாநகரில் கேசவ பாண்டுரங்கர், சுகுணா என்னும் திவ்ய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வெகுநாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. தங்களது மனவருத்தத்தை நீக்கி அருளும்படி, அவர்களது குருநாதரான ஸ்ரீ மத் விஸ்வாதிக ஆத்ம போதேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் வேண்டி நின்றனர் (58-வது பீடாதிபதி, ஸ்ரீ காமகோடி பீடம், கி.பி 1586-1638, இவரது குருநாதரனான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் ஸ்ரீ ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்த்ரரின் குருநாதர். வடவாம்பலத்தில் இருக்கும் 58-வது ஸ்ரீ பெரியவாளின் அதிஷ்டானத்துக்கும் சென்றோம், 
ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளும், பணிந்து நின்ற தம்பதிகளிடம், விரைவில் இறையருளால் ஆண் மகவு பிறப்பான் என்று நல்லாசி மொழிந்தார். குருநாதரின் வார்த்தைகளில் மனமகிழ்ந்து இல்லம் திரும்பினர்.சில காலம் கழிந்த பின்னர், குருவருளால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, புருஷோத்தமன் என்ற திவ்ய நாமம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். குழந்தை மிகுந்த தேஜஸ் உடையவனாய் இருந்தான். உரிய காலத்தில் புருஷோத்தமனுக்கு உபநயனம் நடத்தினர் பெற்றோர். உபநயனம் முடிந்த கையோடு, குழந்தையை அழைத்துக் கொண்டு ஸ்ரீ மடத்திற்கு வந்தார் கேசவ பாண்டுரங்கர். குழந்தையைக் கண்டுற்ற ஸ்ரீ மத் விஸ்வாதிக போதேந்த்ர சரஸ்வதி சுவாமிகள், குழந்தை யார்? என வினவினார். கேசவ பாண்டுரங்கரும், "இது குருநாதரின் குழந்தை" என்றார். அவ்வாறெனில், குழந்தையை ஸ்ரீ மடத்துக்கே கொடுக்க முடியுமா? என்றார் குருநாதர். கேசவ பாண்டுரங்கர், தனது துணைவியுடன் கலந்தாலோசித்து வருவதாகக் கூறி விடை பெற்றார். குழந்தையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுத்தால், சந்நியாசி ஆகிவிடுவான், அதனால் தங்களது பரம்பரை வளராமல் நின்று விடும் என்ற எண்ணமும் அவரது மனதில் ஓடியது.
மனைவியிடம் சென்று, ஸ்ரீ மடத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறினார். அதைக் கேட்டதுமே சுகுணா அம்மையார் அழத் தொடங்கினார். காரணம் யாதெனக் கேட்டார் கேசவர், அதற்கு....சுகுணா அம்மையார், "குழந்தையும், நானும் உங்களுக்கே உரியவர்கள்" அதனால் என்னிடம் கலந்தாலோசித்து, ஸ்ரீ குருநாதரிடம் பதில் கூறவேண்டிய அவசியமே இல்லை, அவர் கேட்டதுமே குழந்தையைக் கொடுத்திருக்கலாம் என்றார். கேசவ பாண்டுரங்கரும் மனக் கலக்கம் தீர்ந்தவராய் புருஷோத்தமனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ மடம் திரும்பினார். ஸ்ரீ குருநாதரிடம், குழந்தையை மனமுவந்து ஒப்படைத்து இல்லம் திரும்பினார்.
புருஷோத்தமன் வேத பாடங்கள் கற்பதற்கு குருநாதர் ஏற்பாடு செய்தார். ஞானசாகரன் என்ற நண்பனும், புருஷோத்தமனும் பிரம்மவித்யை நீங்கலாக மற்ற அனைத்தையும் பதினெட்டு வயதிற்குள் கற்றுணர்ந்தனர். பிரம்மவித்யை மட்டும், ஸ்ரீ குருநாதரிடம் பாடம் செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர். ஸ்ரீ குருநாதரும் அவர்களுக்கு அதை உபதேசித்து அருளுவதாகச் சொல்லியிருந்தார். ஆயின், அச் சமயம் குருநாதர் காசியில் இருந்தார். புருஷோத்தமனும், ஞானசாகரனும் காஞ்சி மாநகரில் இருந்து காசிக்கு சென்று குருநாதரை சந்திக்கப் புறப்பட்டனர். ஞானசாகரன், ஜோதிடம் பார்ப்பதில் வல்லவன், காசி யாத்திரை மேற்கொள்ளும் வழியிலேயே அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்திருந்தது. அதனால் புருஷோத்தமனிடம் தனக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் நீயே செய்ய வேண்டும் என்று கூறி இருந்தான். இருவரும் இணை பிரியாத நண்பர்கள் என்பதால், இருவரில் யார் இறந்தாலும், மற்றொருவர் அவருக்கு கங்கையில் இறுதிச் சடங்குகள் செய்து பின்பு தானும் கங்கையில் உயிரை மாய்த்துக் கொள்ளனும் என்று தீர்மானம் செய்தனர்.
பாதி வழியிலேயே, ஞானசாகரன் நோய்வாய்ப் பட்டு இறந்தான். நண்பனுக்குக் கொடுத்த வாக்கின்படி கங்கை சென்று உயிர்த் த்யாகம் செய்யக் காசி யாத்திரையை தொடர்ந்தான் புருஷோத்தமன். காசி சென்றதும், நேரே குருநாதரிடம், சென்று தண்டன் சமர்ப்பித்து, வழியில் நடந்தவற்றை கூறி, தானும் உயிர்த் த்யாகம் செய்யப் போவதாக விண்ணப்பித்தான். இதைக் கேட்ட குருநாதர் வருத்த முற்றார். புருஷோத்தமனை அடுத்த பீடாதிபதியாக நியமிக்கத் திருவுள்ளம் கொண்டிருந்தார் குருநாதர். பின்பு, புருஷோத்தமனிடம், பின்வருமாறு கூறினார், " நீ உயிர்த் த்யாகம் செய்வதற்கு பதிலாக துறவறம் எடுத்துக்கொள், துறவறம் என்பது மற்றொரு பிறப்பே யாம்!, இதனால், நீயும் உனது வாக்கினைக் காப்பாற்றியவனாவாய், எனது எண்ணமும் ஈடேறும்" என்றார். புருஷோத்தமனும் குருநாதரின் வாக்கிற்கு இசைந்தார்.
சந்நியாசம் ஏற்ற பிறகு, சில காலம் காசியில் குருநாதருடன் தங்கியிருந்து பிரம்மவித்யை பயின்றார். பின்னர், ஸ்ரீ போதேந்திரரைத் தென்திசைக்கு அனுப்பி நாமப் பிரசாரத்தில் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்டார் குருநாதர். காஞ்சிபுரம் செல்லும் வழியில் பூரியில் வசிக்கும் ஸ்ரீ லக்ஷ்மீதரர் என்னும் மகான் அருளிச் செய்த பகவன்நாம கௌமுதி என்னும் நாம சித்தாந்த கிரந்தத்தையும் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு, பூரி நோக்கி விரைந்தார் ஸ்ரீ போதர். பூரியில் ஸ்ரீ ஜகன்னாதரை சேவித்து, ஸ்ரீ லக்ஷ்மீதரரின் இல்லத்திற்கு சென்றார். ஆயின், அச்சமயம் லக்ஷ்மீதரர் இறைவனடி சேர்ந்திருந்தார். அவரது புதல்வரான ஸ்ரீ ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் குருநாதர் சொன்ன நாம சித்தாந்த கிரந்தத்தை பெறுவதற்காக இல்லத்திற்கு வெளியே காத்திருந்தார். உள்ளே சென்று அவர்களை தொந்தரவு செய்ய மனமின்றி, வாயிலில் அமர்ந்து நாம ஜபம் செய்யத் துவங்கினார்.
இதற்குச் சில நாட்கள் முன்னர், ஒரு இளம் தம்பதியர் தீர்த்த யாத்திரையாகக் காசிக்குச் சென்று கொண்டிருந்தனர். மாலைப் பொழுது என்பதால் இரவு அந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தனர். மறுநாள் காலையில், தீர்த்தயாத்திரை வந்தவரின் மனைவியைக் காணவில்லை. சுற்றும் முற்றும் நன்கு தேடினார், இருந்தும் பயனில்லை. ஊர் மக்களிடம் தெரிவித்தபோது, முகலாயர்கள் யாரேனும் உமது மனைவியை கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்றனர். இதைக் கேட்டு மனம் நொந்தார், ஆயினும் காசி யாத்திரையை நிறுத்த விரும்பாமல் காசி நோக்கிப் பயணித்தார். இறை அருளால் காசி யாத்திரை முடித்து அவ்வூர் வழியே வந்து கொண்டிருந்தார். மாலை வேளையில் தனது அநுஷ்டானங்களை ஆற்றுப் படுக்கையில் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரிடம் ஒரு இஸ்லாமியப் பெண்மணி வந்து நின்று 'ஓ' வென்று அழுதார். வந்திருப்பது தன் மனைவி என்பதை உணர்ந்தார், எங்குற்றாய்? என்ன நேர்ந்தது என்றார்? அதற்கெல்லாம் நேரம் இல்லை, முதலில் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்றார் அந்தப் பெண். உடனே இருவருமாக ஊரை விட்டு வெகு தூரம் வந்தனர். பாதுகாப்பான இடத்தை அடைந்ததும், சிலர் தன்னைக் கடத்திச் சென்றது பற்றியும், அவருக்கு அங்கு நடந்த கொடுமைகள் பற்றியும் கண்ணீர் மல்க விவரித்தார். பின்னர், தன்னை மனைவியாக ஏற்காவிடினும், இல்லத்தில் இருந்து தொண்டு புரியும் பாக்யமாவது தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். கணவனும், சாஸ்த்ரங்கள் சம்மதித்தால் அவளை ஏற்பதாகவும் உறுதி பகன்றார். அவர்கள் இருவரும் இது பற்றி ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் கேட்க அவரது இல்லத்திற்கு விரைந்தனர். (அந்த இல்லத்து வாசலில் தான் நம்ம சுவாமிகளும் நாம ஜபம் பண்ணிட்டு இருக்கார்).
இல்லத்திற்கு வந்த இருவரும், கதவைத் தட்டி, ஜகந்நாதரிடம் நடந்தவற்றைக் கூறினர். தங்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினர்.இதைக் கேட்ட மாத்திரத்தில், நீங்கள் இருவரும் மூன்று முறை ஸ்ரீ ராம நாமத்தைச் சொன்ன பிறகு முன்பு போல் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதைக் கேட்ட ஜகந்நாதரின் அன்னை, உள்ளிருந்தவாறே எதற்கு மூன்று முறை, ஒரே முறைசொன்னாலே போதும் என்று உறுதி பட கூறினார். இதைக்கண்டு வியந்த ஸ்ரீ போதர், இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? என்று கேட்டார். தனது தந்தை எழுதிய பகவன் நாம கௌமுதியே இதற்கு ப்ரமாணம் என்றார் ஜகந்நாத பண்டிட். உடனே அந்த அற்புத நூலையும் ஸ்ரீ போதரிடம் குடுத்தார். ஸ்ரீ பெரியவாளும், அன்று இரவே அந்த நாம சித்தாந்த க்ரந்தம் முழுவதையும் படித்தார். காலையில் அந்த தம்பதிகள் இருவரையும் அழைத்து, ஆம்! சாஸ்தரங்கள் சொல்வது உண்மையே, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மக்கள் இதை ஏற்க மறுப்பார்கள். ஆகவே நீங்கள் இருவரும் என்னுடன் நதிக் கரைக்கு வாருங்கள் என்றார். நதியில், ராம நாமம் ஜபித்து மூழ்கி எழும்படி சொன்னார். மூழ்கி எழுந்ததும், இஸ்லாமிய ஆடை அணிந்து இஸ்லாமியர் கோலத்தில் இருந்த அந்தப் பெண் பழைய உருவமும் புனிதமும் பெற்று மலர் மாலை, குங்குமத்துடன் மீண்டு எழுந்தாள். புதுமணத் தம்பதியர் இருவரும் ஸ்ரீ சுவாமிகளை சேவித்து விடை பெற்றனர்.
காஞ்சிபுரத்திற்குத்  திரும்பிய ஸ்ரீ பகவந்நாம போதர், குருநாதரின் விருப்பங்களை நிறைவேற்றும் விதமாக பல நூல்களை இயற்றினார்.அவற்றுள் சில, பகவந்நாம ரசோதயம், பகவந்நாம ரஸார்ணவம், பகவந்நாம ரஸாயனம் என்பனவாம். ஸ்ரீ பகவந்நாம போதர், தனது குருநாதரின் வரவுக்காகக் காத்திருந்தார். குருநாதர் காஞ்சிக்கு எழுந்தருளியதும், அவர் இயற்றிய நாம சித்தாந்த நூல்களை அவரது மலரடிகளில் சமர்பித்தார். ஸ்ரீ போதரின் நூல்களைக் கண்டு குருநாதர் இன்புற்றார். மேலும், பகவந்நாம மகிமையை நாடு முழுதும் பிரச்சாரம் செய்யும்படி உத்தரவிட்டார்.
ஸ்ரீ பகவந்நாம போதரும் குருவாக்கின் படியே கிராமங்களுக்குச் சென்று பகவந்நாம மகிமை பற்றியும், அதுவே தலை சிறந்த மோக்ஷ சாதனம் என்பதையும் மக்களிடம் புரிய வைத்தார். அச் சமயம், திருவியலூர் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாளை சந்தித்தார். ஐயாவாள் ஸ்ரீ போதரை விட வயதில் பெரியவராக இருந்தார். இருவரும் சேர்ந்து பகவந்நாம பிரச்சாரம் செய்யத் துவங்கினர்.
ஒரு முறை பெரம்பூர் என்னும் இடத்திற்கு ஸ்ரீ பகவாந்நாம போதர் நாமப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது, ஒரு அடியவரின் இல்லத்தில் பிக்ஷை எடுத்துக்கொள்ளச் சென்றிருந்தார். அந்த அடியவரின் குமாரன் பிறவி ஊமை. ஸ்ரீ பகவாந்நாம போதர், எங்கெல்லாம் பகவானின் நாம ஜபம் நடக்கிறதோ அங்கு மட்டுமே பிக்ஷைக்கு செல்வது வழக்கம். முன்பே பெரம்பூரில் வசிக்கும் தம்பதிகளை ராம நாம ஜபம் செய்யும்படி கூறியிருந்தார், அவர்களும் இடையறாது செய்தும் வந்தனர். அதன் பயனாகவே ஸ்ரீ பகவான்நாம போதருக்கு அன்னமிடும் பெரும்பேறு பெற்றனர். அவர்களது இல்லத்திற்கு எழுந்தருளிய ஸ்ரீ ஸ்வாமிகள், அவர்களது குமாரனைக் கண்டு மனம் வருந்தினார். தான் அருளிச் செய்த நாம சித்தாந்தம் இந்தக் குழந்தை போன்றோர்களின் விஷயத்தில் உதவாது போய் விடுமே. இவர்களைப் போன்று வாய் பேச முடியாமல் இருப்பவர்களால் பகவானின் திருவடியை எளிதில் அடைய முடியமல் போய்விடுமே என்ற கருணையினால் மனம் கலங்கினார்.
ஸ்வாமிகளின் மனவருத்தத்தை அறிந்த அந்த தம்பதிகள், சுவாமிகளுக்கு தண்டனிட்டு, "ஸ்வாமிகள் இதற்கு வருந்தவேண்டியதில்லை, எல்லாம் பகவத் லீலை" என்று பதிலுரைத்தனர். அத்துடன், தங்களது மகனுக்காக தற்போது ஸ்ரீ குருநாதர் வருத்தம் கொள்கிறார் என்றால், நிச்சயமாக அவன் நற்கதி பெறுவான் அதில் ஐயமே இல்லை என்றும் பணிவோடு கூறினர். அவர்களை மனமார ஆசீர்வதித்து, அங்கிருந்து கிளம்பினார் ஸ்ரீ ஸ்வாமிகள். அவர் அமுது செய்த பிரசாதத்தில் இருந்த மீதியை அந்த தம்பதிகளின் குமாரன் விளையாட்டாக சுவைத்தான். அக்கணமே ராம ராம ராம என்று வாய் திறந்து சொல்ல ஆரம்பித்து, ஸ்ரீ சுவாமிகளைத் தொடர்ந்து சென்றான். சுவாமிகளைப் பிரிய முடியாமல், அவருடனே அவருக்கு கைங்கர்யம் செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு அன்றுடன் அவரோடே இருக்கத் திருவுளம் கொண்டான். ஸ்ரீ ஸ்வாமிகள், அவனுக்கு தனது ஸ்ரீ பாதுகைகளைக் அளித்து ஆசீர்வதித்துச் சென்றார்.
ஆற்காட் நவாபிற்கும், அங்குள்ள சில மக்களுக்கும் ப்ளேக் என்னும் கொடிய நோய் பரவியிருந்தது. அக்காலத்தில் அந்த நோய்க்கு மருத்துவமே இல்லை. உடனே சில அடியார்கள் இதனை ஸ்ரீ ஸ்வாமிகளிடம் தெரிவிக்க, ஸ்வாமியும் அவர்களை அகண்ட நாம பஜனை செய்யும்படி கூறினார். நாம பஜனை செய்யும்போதே நோயால் பீடிக்கப் பட்டவர்கள் நலம் பெறுவதை உணர்ந்தனர். அன்றிலிருந்து ஆற்காட் நவாபும் ஸ்ரீ ஸ்வாமிகளின் தொண்டர் ஆனார்.
நாமப் பிரச்சாரம் செய்த வண்ணமே, திருகோகர்ணம் வந்தார் ஸ்ரீ ஸ்வாமிகள். அங்கு ஒரு தாசி, சுவாமியிடம் வந்து தனக்கும் ராம நாம உபதேசம் செய்யும்படி கோரினாள். தயக்கம் சிறிதுமின்றி ஸ்ரீ ராம நாம உபதேசம் செய்தார். இதனைக் கண்ட அவ்வூர் மக்கள் சுவாமிகளைப் பற்றி அவதூறாகப் பேசினார். எதையும் பொருட் படுத்தாமல் சிலகாலம் அங்கு தங்கி இருந்து பின்பு அங்கிருந்து சென்றார் ஸ்வாமிகள். அந்த அம்மையாரும், உபதேசம் பெற்ற நாளாய் இடையறாது நாம ஜபம் செய்து வந்தாள், சில காலம் கழிந்த பின்னர் மீண்டும் ஸ்வாமிகள் அவ்வூருக்கு வந்தார். ஸ்ரீ சுவாமிகளைக் காண ஓடோடி வந்த அந்த அம்மையார் ஸ்வாமிகளுக்கு தண்டனிட்டார், அக்கணமே யோகிகளைப் போன்று கபால மோக்ஷம் அடைந்தார். இதனைக்கண்டுற்ற ஊர் மக்கள் தங்களது தவறினை உணர்ந்து ஸ்ரீ சுவாமிகளைச் சரண் புகுந்தனர்.
ஒரு நாள் காவேரி நதிக் கரையில் சில குழந்தைகள் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச் சமயம் ஸ்ரீ பகவன்நாம போதர் தமது அவதாரத்தை முடிக்கத் திருவுளம் பற்றினார். குழந்தைகளிடம் சென்று தன்னை மணலால் மூடும்படி சொன்னார். அதை விளையாட்டு என்றே கருதிய குழந்தைகள் அவ்வண்ணமே செய்தனர். மறுநாள், ஊர் மக்கள் ஸ்ரீ சுவாமிகளைத் தேடினர், அப்போது அந்தக் குழந்தைகள் சொன்னதைக் கேட்டு மனம் வருந்தி, அங்கு சென்று நிலத்தை தோண்டினர். கொஞ்ச நேரம் சென்றதுமே, ஸ்ரீ ஸ்வாமிகள், அசரீரியாக "நாம் இங்கு சமாதியில் உள்ளோம் அஞ்சற்க" என்றார். சில காலம் சென்றதும் அந்த இடத்தையே மக்கள் மறந்து போயினர், அங்கு ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானமும் எழுப்பி இருக்கவில்லை. நூறு ஆண்டுகள் கழித்து மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீ பகவான்நாம போதரின் சமாதியை தரிசித்து, அதிஷ்டானம் எழுப்பத் திருவுளம் கொண்டார். தனது கால்கள் இரண்டையும் கயிறுகளால் கட்டி, கோவிந்தபுரம் முழுதும் உருண்டே தேடினார் (ஸ்ரீ ஸ்வாமிகளின் சமாதியில் தனது பாதம் பட்டுவிடக் கூடாதே என்ற உயர்ந்த எண்ணம்). அத்தகு பக்தியுடன் தேடிய சத்குரு ஸ்வாமிகளுக்கு, ஸ்ரீ பகவான்நாம போதர் சமாதி அடைந்த இடத்தில் ஸ்ரீ ராம நாம ஜபம் கேட்டது. உடனே தஞ்சாவூரை ஆட்சி செய்துகொண்டிருந்த மகாராஷ்டிர மன்னரிடம் உதவி பெற்று ஸ்ரீ பகவான்நாம போதேந்த்ராளுக்கு அதிஷ்டானம் எழுப்பினார்.

Thanks to http://www.heritagewiki.org/