Tuesday, 28 February 2017

64 சிவ வடிவங்கள் (52)

52. ஏகபாத மூர்த்தி


கருத்திற்கு எட்டாத, வண்ண, குணமில்லாத, அறியமுடியாப் பொருளாய், எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய், அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான். அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். 

ஆகபடியால்  ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.

இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன, இவரிடமே முடிகின்றன. இவர் தனியானவர் முதன்மையானவர். இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. இவரிடமே தஞ்சமடைகின்றன. அனைத்து தேவர், மூர்த்திகளும் இவரை வணங்கியே அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர். இவர் உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம்.

 இவரைத் தரிசிக்க நாம் செல்ல வேண்டியத்தலம் தப்பளாம் புலியூர் ஆகும். இங்குள்ள ஏகபாத மூர்த்திக்கு செந்தாமரை அர்ச்சனையுடன், நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் திங்கள்தோறும் கொடுத்து, நெய்தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் கூடிவரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தடையில்லா செயல் நடைபெறும். மும்மலம் அழியும்.

thanks to temple.dinamalar

Sunday, 26 February 2017

64 சிவ வடிவங்கள் (51)

51.  திரிபாதத்ரி மூர்த்தி


சிவபெருமானே மகேஸ்வரனாகி அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர். பின் அனைவரையும் தம்முள்ளே ஒடுக்கிக் கொள்வர். அவ்வாறு ஒடுக்குவதை நாம் 

1) நித்தியம், 
2) நைமித்தியம்,
3)பிராகிருதம் 
4) ஆத்தியந்திகம் 

என நான்காகக் கொள்ளப்படும். இவற்றில் நித்தியம் என்றால் உயிரினங்கள் தங்கள் ஆயுளின் முடிவில் சிவனை அடைதலாகும், நைமித்தியம் என்றால் நான்முகனின் பகல் கூடிய உலக சஞ்சலத்தால் மறைதல் பிராகிருதம் என்றால் பிரமதேவனின் கால அளவாகும். அதுத்தவிர உலக உயிரெல்லாம் மடிந்து ஓடுங்குதலாகும். ஆத்தியந்திகம் என்றால் உயிரினங்கள் முக்திபெறுதலாகும். இதில் நித்தியம் வெளிப்படையானது. இதில் நைமித்தியம் பிரளயத்தின் இறுதியில் ஈரேழு உலகமும் சூரியக்கதிர்களை வாங்கி வெளியிடுவதால் அனைத்துமே பிரகாசமாகும். அதனால் கடல் அனைத்தும் வற்றிவிடும். இவ்வாறு நடந்த பின்பு நூறாண்டுகளில் அனைத்து திசைகளிலும் மழைப் பொழிந்து அனைத்துலகத்தையும் நீரால் நிரப்பும். இக்காலம் பிரமன் யோகநித்தரை செய்யும் காலமாகும்.


அடுத்து பிராகிருதப் பிரளயம் பற்றி பார்ப்போம். பரமானு இரண்டுடையது அணு, அணு மூன்றுடையது திரிசரேணு, திரிசரேணு மூன்றுடையது துடி, துடி மூன்றுடையது வேதை, வேதை முன்றுடையது லவம், லவம் மூன்றுடையது நிமிடம், நிமிடம் மூன்றுடையது கணம், கணம் ஐந்துடையது காட்டை, காட்டை பதினைந்துடையது லகு, லகு பதினைந்துடையது கடிகை, கடிகை இரண்டையது நாள், நாள் பதினைந்துடையது பட்சம், பட்சம் இரண்டுடையது மாதம், மாதம் இரண்டுடையது பருவம், பருவம் மூன்றுடையது அயனம், அயனம் இரண்டையது ஆண்டு, ஆண்டு நூறுடையது மனித ஆயுள், மனித ஆயுள் முப்பதுடையது தென்புறத்தவரின் ஒருசான், மரதம், பன்னிரெண்டுடையது தேவர்களுக்கு ஒரு நாள், அத்திகை ஆண்டு பன்னிரெண்டு ஆயிரம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு ஊழி, நான்கு ஊழி கொண்டது பிரமனுக்கு ஒரு பகல். இவ்வாறு அனைத்து உயிரினங்களும் சிவபெருமானிடமே தஞ்சம். இதில் மும்மூர்த்திகளும் நேரத்தில் சிவபெருமான் எழுப்பிய கோலமே திரிபாதத்ரி மூர்த்தி யாகும், 

அதாவது மூன்று பதமான முர்த்திகளும் இவரிடம் அடக்கம். இவரை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம், அத்தலத்தில் அவருக்கும் சொக்கநாதருக்கும் அபிசேகம் செய்து மேகராக குறிஞ்சிப் பண் பாடினால் கோடையாயினும் மழை பொழியும். இவர்க்கு தும்பை அர்ச்சனையும், மிளகு அடை நைவேத்தியமும், புதனன்றுக் கொடுக்க அறிவு விருத்தியடையும் முக்காலம் அறியும் ஆற்றல் ஏற்படும்.

thanks to temple.dinamalar.