Monday, 9 February 2015

தீட்டு

பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் மற்றும் இந்த இடங்களில் இருக்கும் பொருட்கள் தொடர்பான மதம் மற்றும் மரபுவழி விலக்கங்கள். இவ்வாறு விலக்கத்தக்க நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரிடமிருந்து விலகி நிற்பது என்பதை தீட்டு என்கிறார்கள்.இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத் தீண்டக்கூடாது . இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. 
தீட்டு, துடக்கு, குற்றம்,ஆசௌசம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும்
உதரணமாக அக்னி புராணத்திலும் , கருட புராணத்திலும் இது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது 

தீட்டு காக்கும் முறை
ஒரு குடும்பத்தில் நிகழும் ஜனன, மரணங்களுக்கான தீட்டு காக்கும் முறை அனுசரிக்கப்படுகிறது. பிறப்பு தீட்டை விருத்தி தீட்டு என்பர். சாவுத்தீட்டு பிராமணனுக்குப் பத்து நாட்கள், க்ஷத்திரியனுக்கு பன்னிரண்டு நாட்கள், வைசியருக்கு பதினைந்து நாட்கள், மற்றவர்க்கு ஒரு மாதமும் ஆகும். பிறந்த குழந்தை பிராமண குழந்தையானால் ஒரு நாள், க்ஷத்திரிய குழந்தைக்கு மூன்று நாட்கள், மற்ற குழந்தைகட்கு ஆறு நாட்கள் தீட்டு. குழந்தை இறந்தால் பல் முளைக்காவிடில் அன்று பகலுடன் தீட்டு முடியும். சூதகரணம் (அ) குடுமி வைக்காலிருப்பின் ஒரு நாள் தீட்டு. உபநயனம் போன்ற சமயச் சடங்குகள் நிறைவேறாமல் இருந்தால் மூன்று நாட்கள். அதன் பின்னர் மரணமானால் குழந்தைக்கு பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டும்.
நான்காம் வருணக் குழந்தை மூன்று வயதுக்குள் இறந்தால் ஆறாவது நாள் தீட்டு விலகி விடும். மூன்று முதல் ஆறு வயதானால் பன்னிரண்டு நாட்களுக்கும், அதற்கு மேல் இறக்கும் குழந்தைக்கு ஒரு மாதமும் தீட்டு உண்டு. மணமான பெண் மாமனார் வீட்டில் இறந்தால் தகப்பனாரின் உறவினருக்குத் தீட்டு இல்லை. மாமனார் வீட்டில் பிரசவமானால் தந்தை உறவினருக்கு ஓர் இரவில் தீட்டு விலகும். அவள் தந்தை வீட்டில் இறந்தால் மூன்று நாள் தீட்டு காக்க வேண்டும். தீட்டுக்கான இரண்டு நிகழ்வுகள் இருப்பின் இரண்டுக்கும் ஒரே நாளில் தீட்டு தீர்ந்து விடும். இரண்டு வெவ்வேறு நாள்களில் சேர்ந்தால் பின் நிகழ்வுக்கான காலத்தின் முடிவில் தான் தீட்டு விலகும். உறவினர் அயல் நாட்டில் மரணமானால் பத்துநாட்களுக்குள் தெரிந்தால் மீதமுள்ள நாட்கள் வரை தீட்டு. பத்து நாட்களுக்குப் பின் ஓராண்டுகளுக்குப் பின் தெரிந்தால் கேட்ட நாளிலிருந்து மூன்று நாட்கள் தீட்டு. அதற்கு மேற்பட்டால் கேட்டவுடன் ஸ்நானம் செய்தால் தீட்டு போய்விடும். குறைப் பிரசவமானால் எத்தனை மாதம் கர்ப்பமோ அத்தனை நாட்கள் தீட்டு.

  1. கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
  2. பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
  3. பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
  4. ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
  5. பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
    மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
    அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
    குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
    (பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர்   திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
  6. குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
  7. குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு
மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.


10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
  • இறந்தவர் (குழந்தை)யின் தந்தை
  • தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்
மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.


3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு.
  1. தாயின் தந்தை (மாதாமஹர்)
  2. தாயின் தாய் (மாதாமஹி)
  3. தாயின் ஸஹோதரன் (மாதுலன்)
  4. மாமன் மனைவி (மாதுலானி)
  5. மாமனார்
  6. மாமியார்
  7. தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)
  8. தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)
  9. ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்
  10. உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)
  11. ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)
  12. கல்யாணமான பெண்
  13. கல்யாணமான ஸஹோதரி
  14. ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)
  15. ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)
  16. ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)
  17. 7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.
  18. 2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.
  19. 7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.
பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும். 

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்).
  1. அத்தையின் பிள்ளை அல்லது பெண்
  2. மாமனின் பிள்ளை அல்லது பெண்
  3. தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்
  4. தன்னுடைய ஸஹோதரியின் பெண்
  5. தன் ஸஹோதரனின் மணமான பெண்
  6. சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்
  7. தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)
  8. பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)
  9. உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)
  10. உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)
கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்).
  1. ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி
  2. ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.
  3. ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை
  4. ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா
  5. கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.
  6. ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்
  7. ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.
  8. குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால்.

சுப காரியங்கள் தவிர்க்க வேண்டிய காலம்

பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்தபின் தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் பற்றி சில பரிந்துரைகளை அளிக்கின்றன. இறந்தவர் மற்றும் குறிப்பிட்டவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள உறவுமுறைகள் தான் தவிர்க்க வேண்டிய சுப காரியங்களை மாதங்கள் மற்றும் ஆண்டு கணக்கில் பரிந்துரைக்கின்றன.
எண்உறவுதீட்டு காலம் (வருடம் - மாதங்களில்)
1ஒருவரின்
தாய் இறந்தால்
ஒரு வருடம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
2ஒருவரின்
தந்தை இறந்தால்
ஒரு வருடம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
3ஒருவரின்
மனைவி இறந்தால்
மூன்று மாதங்கள்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
4ஒருவரின்
சகோதரன் இறந்தால்
ஒன்றரை மாதங்கள்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு
5ஒருவரின்
ப்ங்காளிகள் (தாயாதிகள்) இறந்தால்
ஒரு மாதம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு

நட்சத்திர தோஷம் (அடைப்பு)

ஒருவர் இறந்த நேரத்தின் போது வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும் தோஷம் உண்டு. அவிட்டம் (தனிஷ்டா) முதல் ரேவதி வரையிலான ஐந்து நட்சத்திரங்கள் தனிஷ்டா பஞ்சமி என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் வரும் போது ஒருவர் இறந்தால் ஆறு மாதங்களுக்கு அடைப்பு (வீடு மூடப்பட்ட வேண்டும்) என்கிறார்கள். இது தவிர கார்த்திகைக்கு ஆறு மாதங்களும், ரோகிணி மற்றும் மகத்திற்கு ஐந்து மாதங்களும், புனர்பூசம், உத்திரம், உத்திராடம் மற்றும் விசாகத்திற்கு மூன்று மாதங்களும், மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்களும் அடைப்பாகும்.
எண்நட்சத்திரம்அடைப்பு காலம் (மாதங்களில்)எண்நட்சத்திரம்அடைப்பு காலம் (மாதங்களில்)
1கார்த்திகைஆறு மாதங்கள்8விசாகம்மூன்று மாதங்கள்
2ரோகிணிஐந்து மாதங்கள்9உத்திராடம்மூன்று மாதங்கள்
3மிருகசீரிஷம்இரண்டு மாதங்கள்10அவிட்டம்ஆறு மாதங்கள்
4புனர்பூசம்மூன்று மாதங்கள்11சதயம்ஆறு மாதங்கள்
5மகம்ஐந்து மாதங்கள்12பூரட்டாதிஆறு மாதங்கள்
6உத்திரம்மூன்று மாதங்கள்13உத்திரட்டாதிஆறு மாதங்கள்
7சித்திரைஇரண்டு மாதங்கள்14ரேவதிஆறு மாதங்கள்

வர்ண அடிப்படையில் தீட்டு

இரத்த உறவுகள் இறப்பின் அதற்குரிய தீட்டு பிராமணர்களுக்குப் பத்து நாட்களும் சத்திரியர்களுக்குப் பன்னிரண்டு நாட்களும் வைரியருக்குப் பதினைந்து நாட்களும் சூத்திரருக்கு முப்பது நாட்களுமாகும்

கருட புராணத்தில் ...........

அகார வாச்சியரான திருமால் வேதவுருவ்னனான கருடனை நோக்கி, கருடா! நான் உனக்குச் சில தர்மங்களைச் சொல்லுகிறேன் கேள்!

கருடா! கிருதாயுகத்தில் மாஹதவம் செய்வது மானிடர்க்கு உத்தமமானது. திரேதாயுகத்தில் தியானஞ் செய்வது உத்தமமாக இருந்தது. துவபாரயுகத்தில் யாகங்கள் செய்வது உத்தமமாக இருந்தது. கலியுகத்தில் தானங்கள் செய்வதே உத்தமமாகும். இல்லறத்தில் இருப்பவனுக்கு எந்த யுகமானாலும் யாகாதி கர்மங்களை செய்வதும் கோயில், குளம், சத்திரம், தோட்டம் முதலியவற்றை உண்டாகி தருமஞ் செய்வதும் அதிதியாராதனம் செய்வதும் உத்தமமான செயல்களாகும். இல்லறத்தில் இருப்பவன், தன் தயாதிகளில் யாரேனும் இறந்துவிட்டால் அவரைக் குறித்து தர்ப்பணம் செய்வது அவசியம். இறந்தவன் அந்தப் புனலைப் பெற்று மகிழ்வான். இறந்த தினத்தின் மூன்றாம் நாளில் மூன்று சிறு கற்களைக் கயிற்றில் கட்டி இரவு நேரத்தில் எறிய வேண்டும். சஞ்சயனம் செய்த பிறகு தாயத்தார் அனைவரும் இறந்தவனுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முதல் மூன்று வர்ணத்தாராகிய பிரம, ஷத்திரிய, வைசியருக்குச் சூத்திரன் தர்ப்பணம் செய்யலாம். பிரம, ஷக்திரியருக்கு வைசியன் தர்ப்பணம் செய்யலாம். ஷக்திரியன் பிராமணனுக்குத் தர்ப்பணம் செய்யலாம். பிராமணன் தன் மரபினருக்கள்ளாமல் மற்ற குலத்தினருக்கு ஒன்றுமே செய்யலாகாது. சூத்திரனுடைய சவத்தோடு பிராமணன் சுடுகாட்டுக்குச் சென்றால் அந்தப் பிராமணனுக்கு மூன்று நாட்கள் ஆசௌசம் உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அந்தப் பிராமணன் காவிரி போன்ற புனித நதியில் குளித்துத் தூய்மையாக வேண்டும். மாயந்தவனுக்குக் கர்மம் செய்பவன் யாராயினும் அவன் பஞ்சணையில் படுத்துறங்கக் கூடாது. இறந்தவனுடைய நல்ல குணங்களையே எடுத்துச் சொல்ல வேண்டும். எமனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். இறந்தவனுக்கு, அவனைக் குறித்துப் போடப்படும் பிண்டங்கலாலேயே சரீரம் உண்டாகிறது. எனவே பத்து நாட் கிரியைகளையும் தவறாமல் முறைப்படிச் செய்வது அவசியம். பத்துநாள் கருமங்களைச் செய்யாவிட்டால், மாயந்தவன் சரீரம் பெற முடியாமல் வருந்துவான். 

தனுர் வேதமுணர்ந்த வல்லாளன் ஒருவன், குறி வைத்து அம்பை எய்தால், அந்த அம்பானது குறிதவறாமல் குறித்த இடத்தில் தைப்பது போல, கலைகள் உணர்த்த சற்புத்திரன் மரித்த தன் தாய் தந்தையர்க்குரிய கர்மங்களைச் செய்தால், அக்கரம பயன்கள் அவர்களைத் தவறாமல் சென்றடையும். மரித்த ஜீவன் மூன்றாவது நாள் நீரிலும், மூன்று நாட்கள் அக்கினியிலும், மூன்று நாட்கள் ஆகாயத்திலும், ஒரு நாள் தனது வீட்டிலும் ஆவியுருவில் வசிப்பான். முதல் நாளிலும், மூன்றாவது நாளிலும், ஐந்தாவது நாளிலும், ஏழாவது நாளிலும்,ஒன்பதாவது நாளிலும், பதினொன்றாம் நாளிலும், நவகிரார்த்தம் செய்ய வேண்டும். முதல் நாளன்று, எந்த இடத்தில் தர்ப்பணம் முதலியவை செய்யப்பட்டனவ, அதே இடத்தில் மற்ற பத்து நாள் கிரியைகளையும் பத்து நாட்களிலும் செய்ய வேண்டும். பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களில் எந்தக் குலத்தவருக்கு எத்தனை நாட்கள் ஆசௌசம் விதிக்கப்பட்டிருகிறதோ, அத்தனை நாட்களும் பிண்டத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். அது அவசியமாகும். எந்த திதியில் ஒரு ஜீவன் மரிக்கிறானோ அந்த திதியில் மாசிகம் செய்தலும் அவசியம். பதினொன்றாம் நாள் பலகாரத்தோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒருவன் அதிக வருத்தப்பட்டு இறந்து விட்டான் என்றால், அவனைக் குறித்து ஏகொதிஷ்ட சிரார்த்தம் சிறப்பாக செய்யப்படுமானால், அவன் வருத்தம் நீங்கி இன்பமடைவான். அந்த ஏகொதிஷ்ட சிரார்த்தத்தை சத்திரியன் பன்னிரெண்டாவது நாளிலும் வைசியன் பதினைந்தாவது நாளிலும் செய்ய வேண்டும். தாய் தந்தை மரித்தாலும் மகவு பிறந்தாலும் சூத்திரக் குலத்தாருக்கு ஒரு மாதம் வரையில் ஆசௌசம் உண்டு.

அரைமாதம் உண்டு என்று சொல்வாரும் உண்டு. சூத்திரன் பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஏகொதிஷ்ட சிரார்த்தம் செய்ய வேண்டும். ஒருவன் இறந்தால், பத்து நாட்கள் தீட்டுடைய அவனுடைய தாயாதிக்காரன் கருமம் முடிந்த பிறகு மூன்று மாதங்களுக்குள்ளாக இறந்த செய்தியை எப்போது கேட்பினும் அத்தாயத்தானுக்கு மூன்று தினம் தீட்டு உண்டு. மூன்று மாதத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள்ளாக கேட்டாலும் ஒரு வருஷத்திற்குள் கேட்டால் ஒரு தினம் மட்டுமே தீட்டு உண்டு. ஒரு வருஷம் முடிந்த பிறகு கேட்டால் கேட்டவுடனேயே ஸ்நானம் மட்டும் செய்தல் போதும். இந்த விதி எல்லா வருணத்தாருக்கும் பொதுவாகும்.

வைனதேயா! முன்பே சய்யாதானம் செய்ய வேண்டும் சொல்லியிருக்கிறேன். எந்தப் புருஷனும் அன்னதானத்தைத் தன் கையாலேயே செய்ய வேண்டும். நல்ல மரத்தில் கட்டில் செய்து சொர்ணத்தாலும், வெள்ளியாலும் பூண்கள் போட்டு முத்து மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அந்தக் கட்டிலை அலங்கரித்து பாயில் விரித்துத் தீபம், சந்தானம், புஷ்பம், தாம்பூலம் இவற்றுடன் நறுமணமுடைய மற்ற யாவும் நீருடன் செம்புத்தாலியும் அலங்காரத்திற்கும் லீலார்த்தமாகவும் ஸ்திரி புருஷர்களுக்கு வேண்டியவைகளை பூஜித்து, சிவன் முதலிய தேவர்களும், பார்வதி முதலிய தேவமங்கையரும் லட்சுமிநாரயணரும் இந்தச் சய்யானத்தால் திருப்தியடைய வேண்டும் என்று சொல்லி உபாத்தியாயனுக்குத் தானஞ் செய்து அவனை வலம் வந்து சேவிக்க வேண்டும் என்றருளினார்

 சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது:

தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம். முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.
கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.
கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று - அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.
மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணத்தில் வபனம் உண்டு.
இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்துகொள்வதே சிறந்தது.
தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்துகொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை (270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்துகொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம். 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

தீட்டில்லாத காலங்கள் ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை. வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை. விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை. ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். மற்ற சில கவனிக்கத் தக்கவை ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம். துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது. தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு. தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை. கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும். கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை. பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை. ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது. தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு. பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை. மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது. சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது. சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும். சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது. தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது. ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது. தீட்டுக்காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது. தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே. ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது. சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும். சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் தான் தீட்டு...


பின் குறிப்பு : ஆனால் சகல தீட்டும் உடனே போக வேண்டும் என்றால் ராம, சிவ நாமாவை பக்தியோடு சொல்ல போகும் (இது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் )